ஜூன் 1 முதல் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

ஜூன் 1 முதல் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி

தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, மே26 கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனை கருத் தில் கொண்டு மீன்பிடி தடைக் காலத்தை 61 நாள்களில் இருந்து 47 நாள்களாக குறைக்க வேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து வந் தனர்.


இதையடுத்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் மற்றும் தேசிய மீனவர் பேரவை உள் ளிட்ட மீனவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய மீன்வள அமைச்சகம், கிழக்குக் கடற்கரை பகுதி மீனவர்களுக் கான வங்க கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவை 61 நாள்களில் இருந்து 47 நாள் களாக குறைத்து உத்தரவிட்டுள் ளது.


அதன்படி தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.


மேலும் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல் லலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment