கரோனா - 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக நிவாரணப் பொருட்கள் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 5, 2020

கரோனா - 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக நிவாரணப் பொருட்கள் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன


வல்லம், மே.5 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் டாக்டர் கி.வீரமணி மற்றும் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கரோனா  19 வைரஸ் நோய் தொற்று பரவிலின் காரணமாக ஊரடங்கு உத்திரவு அமலின் இருக்கும் காரணத்தால் பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் 98 பணியாளர்களுக்கு நிவராணப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் ஆலோசனையின் படி மக்கள் தொடர்பு அலுவலர் ப.இளங்கோ, சக்கரவர்த்தி விடுதியின் மேற்பார்வையாளர் ம.அழகிரிசாமி மற்றும் நாகம்மையார் விடுதி அலுவலர் ஆர்.தங்கபாஸ்கரன், பணிமனை பணிபுரியும் சந்துரு மற்றும் வளாக பாராமரிப்பு துறை பேரா திருமால்முருகன், பல்கலைக்கழக வேளாண்மை அலுவலர் க.பாண்டியன், அலுவலக பணியாளர்கள் ஆர்.ஜவகர், ரமேஷ், ரெங்கராஜன், சுகுமாறன், வெற்றிச்செல்வன், சந்தானகிருஷ்ணன், நா.வெங்கடேசன் இவர்களுடைய மேற்பார்வையில் பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.  இந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.75000/- ஆகும்.


No comments:

Post a Comment