ஏட்டுதிக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

ஏட்டுதிக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • கரோனா தொற்றைத் தடுத்திடும் கட்டுப்பாடுகளை முதியோர் சொல் கேட்டு நடக்கும் வீடுகளில் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர்.

  • தொழில் நுட்ப உற்பத்தியில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரப்பட வேண்டும் என தெலுங்கானா மாநில தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கே.டி.ராமராவ் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

  • நாட்டின் பண வீக்கம் நிரந்தரமற்றதாக இருக்கிறது; உள் நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி) தொடர்ந்து பின்னடைவில் இருக்கும். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தகைய பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார்.


தலையங்க செய்தி:



  • மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி குறைப்புக்குக் காரணம் பாஜக அல்லாத ஆட்சி அங்கே நடைபெறுகிறது என்ப தாலா?

  • ரிசர்வ் வங்கியின் வரிக்குறைப்பு பலனளிக்காது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழ் நாட்டில் 15000-த்தை நெருங்குகிறது. குறிப்பாக சென்னையில் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ரூ.50000 வரை கட்டணம் வசூலிப்பதாகவும், சிலரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுவதாகவும், சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி செய்தி அளித்துள்ளார்.

  • நாடாளுமன்றத்திலும், பொதுத்துறை நிறுவனங்களிடமும் கலந்து ஆலோசிக்காமல், தனியாருக்கு தாரைவார்க்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. மாநில சுயாட்சி மறக்கடிக்கப்படுகிறது. அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்படு கிறது என 22.5.2020 அன்று காணொலி வழியே நடைபெற்ற, திமுக, சிவசேனா உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


தினமணி, சென்னை பதிப்பு:



  • கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். மின்சார மசோதா குறித்தும், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் குறித்தும் முதல்வர் எழுதிய அறிக்கை குறித்து பெருமிதத்துடன் தினமணியில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • 12000 பகுதி நேர ஆசிரியர்கள் மே மாதச் சம்பளம் தந்திட அரசை வலியுறுத்தி உள்ளனர். இதில் 200 மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.

  • குஜராத் ஒரு மாடல் மாநிலம் என பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது கரோனா தொற்று தடுப்ப தில் அந்த மாநிலம் தடுமாறுவதாக கட்டுரையாளர் மகேஷ் லங்கா தெரிவிக்கிறார். பிப்ரவரி, மார்ச் மாதத்தில், குஜராத் அரசு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ‘நமஸ்தே டிரம்ப்’ என விழா எடுத்ததையும், பின்னர் மாநிலங்களவை தேர்தலில் கவனம் செலுத்தியதையும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:



  • சீன நாட்டு 3 வங்கிகளில் கடன் வாங்கிய நிலையில், அந்த வங்கிகளுக்கு ரூ.5448 கோடி செலுத்திட ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


- குடந்தை கருணா,


23.5.2020


No comments:

Post a Comment