உலக அளவில் கரோனா பாதிப்பு 45,84,124. உயிரிழப்பு 3,05,790. உலக அளவில் 11 ஆம் இடத்தில் இந்தியா.
இந்தியாவில் பாதிப்பு 81,970. உயிரிழப்பு 2750. நேற்று மட்டும் பாதிப்பு 3967
தமிழ்நாட்டில் பாதிப்பு 10,108 நேற்று ஒரு நாள் மட்டும் 434; உயிரிழப்பு 71. சென்னையில் பாதிப்பு 5946; நேற்று ஒரு நாள் மட்டும் 311.
‘லட்டான செய்தி!'
ஏழுமலையான் கோவில் பிசினஸ் ஆரம்பமாகிவிட்டது. லட்டு விற்பனை நேற்று தொடங்கப்பட்டது. ஒரு பெரிய லட்டு ரூ.200; ஒரு வடை ரூபாய் 100. விற்பனை கனஜோராம்! எவ்வளவு மலிவான செய்தி!
வாரத்தில் 6 நாள்கள் வேலை
தமிழ்நாட்டில் வரும் திங்கள் முதல் வாரத்தில் ஆறு நாட்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுவார்கள். முதல் வாரத்தில் திங்கள் செவ்வாய்க் கிழமைகளில் முதல் பிரிவினரும், புதன், வியாழன்களில் இரண்டாம் பிரிவினரும் வெள்ளி, சனிக் கிழமைகளில் முதல் பிரிவினரும் பணியாற்றுவார்கள்.
எவ்வளவு வேண்டுமானாலும்
குடிக்கலாம் போலும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட எல்லைகளைத் தவிர்த்து மதுக்கடைகள் இன்று திறப்பு. எவ்வளவு மதுப் பாட்டில்கள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையில் 500 டோக்கன்களை வழங்கப்படுமாம். காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை குடிமக்கள் மதுவை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் கார்டு எல்லாம் தேவையில்லையாம்.
No comments:
Post a Comment