பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பாக மனிதநேய உதவிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பாக மனிதநேய உதவிகள்!


பட்டுக்கோட்டை, மே 22 மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு (கரோனா தொற்று நோய்) காரண மாக வேலை இன்றியும், வேறு வருமானம் இன்றியும் வீட்டில் உள்ள கழகத் தோழர்கள், பொது மக்களுக்கு கழக தோழர்கள் தாங் களால் முடிந்ததை செய்து உதவி டுங்கள் என்ற கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைக்கேற்ப, பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பாக பேராவூரணி சேதுபாவசத் திரம் ஒன்றியம் நகரம் சார்பில் 11.5.2020 திங்கள் அன்று பேராவூரணி தந்தை பெரியார் படிப்பகத்தில் ரூ.1500 மதிப்புள்ள அரிசி 10 கிலோ, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் கொண்ட தொகுப்புப் பை வழங்கப் பட்டது.


அதன்படி பேராவூரணி ஒன் றியம் - 04 நகரம் - 02, சேதுபாவா சத்திரம் ஒன்றியம் - 03 என மொத் தம் 9 தோழர்களுக்கு வழங்கப் பட்டது. தொகுப்புப் பைகள் மாவட்ட கழகச் செயலாளர் வை. சிதம்பரம் தலைமையில், மாவட்டக் கழக புரவலர் சி.வேலு,  மாவட்ட கழக அமைப்பாளர் சோம. நீல கண்டன் முன்னிலையில், விடுதலை வாசகர் வட்ட செயற்குழு உறுப் பினர் கவிஞர் மு. மோகன் நிவா ரணப் பொருட்களை வழங்கினார். மற்றும் நகர கழக தலைவர் குழ. அரங்கசாமி, சேதுபாவா சத்திரம் ஒன்றிய கழகத் தலைவர் சி. செக நாதன், ஒன்றிய கழகத் தலைவர் மு. தமிழ்ச்செல்வன், ஒன்றிய மாணவர்  கழக பொறுப்பாளர் இர. தமிழன், பொதுக்குழு உறுப்பினர் இரா. நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர்.


நிதி உதவி செய்தோர்: மாவட்ட கழக செயலாளர் வை. சிதம்பரம், சித்தாதிக்காடு கழகத் தோழர் பொறியாளர் இரா. கதிர்வேல், கழகப் பொதுக் குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி, மாவட்ட ப.க. புரவலர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் சி. வேலு, பேரா வூரணி ஒன்றிய கழகத் தலைவர் மு. தமிழ்ச் செல்வன், மாவட்ட ப.க. ஆசிரியரணி பொறுப்பாளர் அ.வே. வெள்ளத்துரை, மாவட்ட கழக அமைப்பாளர் சோம. நீல கண்டன், மேனாள் பேராவூரணி ஒன்றிய கழகத் தலைவர் தி. இரவி ஆகி யோர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒன்றிய கழக செயலாளர் இரா. மணிகண்டன், போல பட்டுக் கோட்டை நகரம் சார்பில் நகர கழகத் தலைவர் கோட்டை சிற்பி வை சேகர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் இரவிச்சந்திரன் அவர்களும் இணைந்து ரூ.1,500, ரூ.1000/-  என 7 கழக தோழர்களுக்கு நிதி உதவி செய்து மகிழ்ந்தனர். மதுக்கூர் ஒன்றியத்தில் மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ. வீரை யன், ஒன்றிய கழக தலைவர் பெ. அண்ணாத்துரை, ஒன்றிய கழக ப.க. செயலாளர் புலவஞ்சி இரா. காமராஜ் ஆகியோர் இணைந்து 15 கழகத் தோழர் களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் கொண்ட தொகுப்புப் பைகளை வழங்கினர். பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் நான்கு ஒன்றியங் களிலும் வழங்கப்பட்ட நிவார ணங்கள் மாவட்ட கழக தலை வர் பெ. வீரையன், மாவட்ட கழக செய லாளர் வை. சிதம்பரம் ஆகியோர் சிறப்பான மேற்பார்வையில் செய் யப்பட்டது.


No comments:

Post a Comment