பாடம் கற்போம்! செயல்படுவோம், வாருங்கள்!!
அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் இந்திய சமூகப் புரட்சி வரலாற்றில், போராட்ட வீராங்கனையாக ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே களங்கண்டு, 'தேசப்பிதா' காந்தியாரின் உளங்கொண்டு உயர்த்திக் கூறப்பட்ட தனித்தகுதி பெற்றவர்.
போராட்ட வீராங்கனையாய், பத்திரிகை அதிபராக - பொறுப்பாளராக கருத்துரி மைக்கு வழக்கு மன்றத்தில் நின்று
95 ஆண்டுகளுக்கு முன்பே வாதாடிய கருத்துரிமைப் போராளி - சுயமரியாதை இயக்கத்தின் மூலக் கொள்கைகளான ஜாதி ஒழிப்பு - பெண்ணடிமை ஒழிப்பு ஆகியவற்றினை நடைமுறைப்படுத்த அக்காலத்தில் ஜாதி மறுப்பு திருமணத்திற்கும், விதவை மறுமணம் போன்றவற்றிற்கும் முன்னணியில் இருந்து செயலாற்றிய ஒரு பாசறை அமைப்பாளராகவே ஆகி, தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் ஆணி வேர் பிடித்து செழித்து வளர ஓர் ஏருழுவராகி, அதற்கு ஏற்றம் தந்த ஒப்பற்ற தொண்டறத்தாய்.
அவரது நினைவு நாளை இவ்வாண்டு முதல் ‘‘பெண்கள் உரிமைகள் போராட்டப் பேரிகை'' நாளாகக் கொண்டாட, கழகம் எடுத்த முடிவினையொட்டி, வருகின்ற ஒரு வாரம் முழுவதும் காணொலிமூலம் - இணையம்மூலமாகவும் கொள்கைப் பரப்பி, மகளிர் உரிமைக்காக மகத்தான தளம் அமைத்து, களம் காண ஆயத்தமாவோம்!
வாழ்க தந்தை பெரியார்! வாழ்க அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.5.2020
No comments:
Post a Comment