கரோனா ஊரடங்கு காலத்தில் தொய்வில்லாமல் நடைபெறும் புத்தகப் பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

கரோனா ஊரடங்கு காலத்தில் தொய்வில்லாமல் நடைபெறும் புத்தகப் பணிகள்

சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர், தொகுப்பாளர் எம். இலியாஸ் தாம் 'பேசும்பொழுது, ஊரடங்கு காலத்தில் 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர்' புத்தகத்தின் இரண்டாம் பாக தொகுப்புப் பணிகளில் முனைப்பாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். புத்தகத் தொகுப்புப் பணிகள் பெரும்பாலும் நிறைவை எட்டும் நிலையில், ஒளிப்படங்களைச் சேர்த்திடும் பணியில் தற்சமயம் கவனம் செலுத்தி வருவதைக் குறிப்பிட்டார். விரை வில் 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர்' இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என அருமையான தகவலையும் பகிர்ந்து கொண்டார்.


புதுமைத் தேனீ கவிஞர் மா. அன்பழகன் பேசிய பொழுது, உடல் உழைப்பு ஒப்பீட்டளவில் முடங்கிப் போன கரோனா காலத்தில் உடற்பயிற்சி மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார். தமிழர் தலைவர் கடைப்பிடித்து வரும் உடற்பயிற்சி பற்றிய தகவலைத் தரும்படி வேண்டினார். மேலும், தான் எழுத்துப் பணிகளில் அதிக முனைப்புக் காட்டுவதையும், பேரா சிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் பல்வேறுபட்ட நூல்களை படிப்பதில் ஆர்வம் உள்ளதையும் குறிப்பிட்டு விட்டு, தமிழர் தலைவர் புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் அதீத முனைப்புக் காட் டிடும் தலைவர் என்பதை ஒப்பிட்டு மகிழ்ந்தார். கரோனா காலத்தில் தமிழர் தலைவர் மேற்  கொண் டுள்ள எழுத்துப் பணிகள், புத்தக  வெளியீட்டு முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment