உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு
ஜெனீவா, மே 27 கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் களுக்கு ஹைட்ராக் சிகுளோ ரோகுயின் மாத்திரைகள் தந்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அதிரடி நட வடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 22-ந் தேதி தி லேன்சட் மருத்துவ பத்தி ரிகை, கரோனா வைரஸ் தொற்று பாதித்து மருத்து வமனைகளில் அனுமதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு ஹைட் ராக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மாத்திரைகளை கொடுத்ததின் விளைவுகளை ஆராய்ந்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவை வெளியிட்டது.
இந்த ஆய்வில் ஹைட்ராக் சிகுளோரோகுயின் மாத் திரைகளை தனியாகவும், மேக்ரோலைடு மாத்திரை களுடன் சேர்த்தும் எடுத்துக் கொண்ட நோயாளிகளின் இறப்புவீதம் அதிகளவில் உள்ளதாக தெரிய வந்துள் ளது.
குறிப்பாக 96 ஆயிரம் கரோனா நோயாளிகள், ஆய் வுக்கு பயன்படுத்தப்பட்டுள் ளனர். அவர்களில் 15 ஆயிரம் பேருக்கு ஹைட்ராக் சிகு ளோரோகுயின் மாத் திரைகள் தனியாகவோ, ஆன் டிபயாட்டிக் மாத்திரை களுடனோ தரப்பட்டுள்ளது. இதில் ஹைட்ராக் சிகுளோ ரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்களில் இறப்புவீதம் 18 சதவீதம், குளோரோகுயின் மாத்திரை கள் எடுத்துக்கொண்டவர் களில் இறப்பு வீதம் 16.4 சதவீதம் என தெரிய வந்தது. (இவ்விரு மாத்திரைகளும் மலேரியா சிகிச்சையில் பயன் படுத்தக் கூடியவைதான்)
இவ்விரண்டு மாத்திரை களில் ஒன்றை ஆன்டிபயாடிக் மாத்திரைகளுடன் தந்து சோதித்தபோது இறப்புவீதம் இன்னும் அதிகமாக இருந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தியவர்கள், கரோனா வைரஸ் சிகிச்சையில் ஹைட் ராக் சிகுளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத் தக்கூடாது என தெரிவித் தனர்.
இந்தநிலையில், கரோனா வைரஸ் தொற்று உள்ளவர் களுக்கு ஹைட்ராக் சிகுளோ ரோகுயின் மாத்திரைகளை தருகிறபோது அதிகள வில் இறப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளதால், இந்த மாத் திரைகளை கரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்தி சோதிப்பதை நிறுத்தி உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள் ளது. இதை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதா னோம் அறிவித்தார்.
No comments:
Post a Comment