வதைக்காதே! வதைக்காதே!
பொதுமக்களை வதைக்காதே!
நிரப்பாதே! நிரப்பாதே!
சாராயத்தால் கஜானாவை நிரப்பாதே!
போகுதே! போகுதே!
கரோனாவால் உயிரெல்லாம் போகுதே!
குடிக்காதே! குடிக்காதே!
மக்களின் உதிரத்தைக் குடிக்காதே!
கெடுக்காதே! கெடுக்காதே!
ஏழை மக்களின் குடியைக் கெடுக்காதே!
கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
மக்கள் நலனில் அக்கறை இல்லா
மாநில அரசைக் கண்டிக்கிறோம்!
கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
நாளுக்கொரு சட்டம் போட்டு
நாட்டு மக்களை நாசமாக்கும்
தமிழக அரசைக் கண்டிக்கிறோம்!
கும்பி கூழுக்கு அழுகிறபோது
கொண்டை பூவுக்கு அழுவதா?
குடிமக்கள் பசியில் வாடும்போது
குடிக்க மதுக்கடை திறப்பதா?
இழுத்து மூடு! இழுத்து மூடு!
அத்தியாவசிய கடைகளை
திறக்க மறுக்கும் தமிழக அரசே
மதுக்கடைகளை இழுத்து மூடு!
திறக்காதே! திறக்காதே!
தமிழக அரசே திறக்காதே!
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
மதுக்கடைகளைத் திறக்காதே!
திறக்காதே! திறக்காதே!
மாநில அரசே திறக்காதே!
மக்கள் வாழ்வை சீரழிக்கும்
மதுக்கடைகளைத் திறக்காதே!
No comments:
Post a Comment