ஏட்டுதிக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

ஏட்டுதிக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • மத்திய அரசின் பொருளாதார மேம்பாட்டு ஊக்கி வெறும் 1.86 லட்சம் கோடியே (ரூ.20 லட்சம் கோடியல்ல). நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் இது வெறும் 0.91 சதவீதமே. இது போதுமான தல்ல என தெரிவித்துள்ளார் மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

  • மாநிலங்களுக்கான கடன் அளவை அதிகரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, விவசாயிகளுக்கு தரப்படும் மின்சாரம் மற்றும் மின்சாரச் சலுகைகளை நிறுத்திட மத்திய அரசு விதித்து உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர், இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்த நிபந்தனைகளை வலியுறுத் தக் கூடாது என்றும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

  • குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் போன்ற நகரங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங் களது ஊருக்கு பயணம் மேற்கொள்ள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நிலையில் நகரின் பல இடங்களில் மறியலுடன் வன்முறையில் ஈடுபட்டதாக மாநில காவல்துறை நூற்றுக்கும் மேற் பட்டோரை கைது செய்துள்ளது.

  • மதவழிப்பாட்டுத் தலங்களை தற்போது திறந்தால், மக்கள் கூட்டம் காரணமாக கரோனா வைரஸ் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்ற மாநில அரசின் பதிலை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது.

  • இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிட முஸ்லீம்களே காரணம் என சமூக வலைத்தளத்தில் செய்தி பரப்பிய துபாய் நாட்டில் சுரங்க நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பீகார் மாநில ஊழியர் பிரிஜ்கிசோர் குப்தா பணி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு முன்னர் இதே போன்று தவறான செய்திகளைப் பரப்பிய மூன்று இந்தியர்கள் அந்த நாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • பொருளாதாரத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு அறிவித்த ஊக்க மருந்து போதுமானதல்ல - தலையங்கச் செய்தி

  • கொரோனா வைரஸ் பரப்பல் குறித்த விசாரணையை உலக சுகாதார நிறுவனம் மேற்கொள்ள வலியுறுத்தி, ஆஸ்திரேலியா, அய்ரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர் மானத்தை இந்தியாவும் ஆதரித்துள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுடில்லி பதிப்பு:



  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினையை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என்று குற்றஞ்சாட்டி, மத்திய அரசின் மேனாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா புதுடில்லி ராஜ் காட் வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டிமார்பூர் சட்ட மன்ற உறுப்பினர் திலீப் பாண்டே ஆகியோரும் உடன் இருந்தனர்.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • மருத்துவமனைகளில் இருந்து 300 செவிலியர்கள் தங்களது வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதால், கரோனா வைரஸ் தடுப்புச் சிகிச்சையில் கொல்கத்தா நகரம் திணறல்.

  • தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு தடுமாற்றம்: மின்சார மசோதாவின் திருத்தங்கள் மாநிலங்களுக்கு சுமையை ஏற்படுத்தும் மற்றும் மின்சாரம் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள நிலையை அழிக்கும் - நடு பக்கக் கட்டுரை - சுதா ராமலிங்கம், தேஜல் கனித்கர், ஆர்.ஸ்ரீகாந்த்


டைம்ஸ் ஆப் இந்தியா, புது டில்லி பதிப்பு:



  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பத்தாயிரக்கணக்கில் டில்லி ராம் லீலா மைதானத்தில் எந்தவித தனிமனித இடைவெளி இன்றி பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். பீகார், உ.பி. ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த இந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குப் பயணம் மேற்கொள்ள வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கேள்விப் பட்டு அங்கே கூடினர். ஏறத்தாழ 12 மணி நேரத்திற்கும் மேலாக அங்கே நின்றும் அனைவருக்கும் பயண ஏற்பாடு செய்யப்பட வில்லை. உணவும் தண்ணீரும் இன்றி அவர்கள் அல்லாடினர்.

  • உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஊர்களுக்கு பயணித்திட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தார். இதனை முதலில் ஏற்க மறுத்த உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது இணங்கி உள்ளார்.

  • பட்ட மேற்படிப்பு முடித்து ஆசிரியர் பணிபுரிந்து வந்த, கணவன் மனைவி இருவரும், கரோனா வைரஸ் முழு அடைப்பு காரணமாக தங்களது தனியார் பள்ளி கடந்த மூன்று மாதமாக சம்பளம் தரவில்லை. எந்த வருமானமும் இல்லாத சூழலில் தற்போது அரசின் தினக் கூலிகளாக பணிபுரிந்து குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர்.


செய்தித்தாள்களின் திரட்டல்


- குடந்தை கருணா


No comments:

Post a Comment