வாழ்வியல் தந்த வள்ளல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

வாழ்வியல் தந்த வள்ளல்

எனக்குப்பின்  இந்த இயக்கம்  எப் படி இருக்கும் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் மருத் துவர்களின் கட்டளைப்படி சுற்றுப் பயணம் மேற்கொள்ளாமல் கொஞ்சம் ஓய்வாக இருந்த காலகட்டத்தில் எப்படி யெல்லாம் நம் பொறுப்பாளர்கள் தோழர் கள் பணியாற்றினார்கள் என்பதை நேர டியாகவே பார்த்தேன் - மகிழ்ச்சி அடைந்தேன். அந்தவகையில் "என் நோய்க்கு நன்றி" இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது என்று 13.6.2015இல் தஞ்சாவூர் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கழக தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் உரையாற்றியது போல,


 இந்த கொரானா நோய் தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கால் முடங்கி கிடக்கும் வேளையிலும் நேற்று சேலம் மாவட்ட மானவர் கழகம் ஏற்பாடு செய் திருந்த "புரட்சி கவிஞர் பாரதிதாசன்" அவர்கள் பிறந்தநாள் காணொலி கருத் தரங்க நிகழ்வில் நான் கலந்து கொண்ட போது ஆசிரியர் அய்யா அவர்களின் எண்ணத்தை ஈடு செய்வது போல இருந்தது. ஆசிரியர் அய்யா அவர்கள் கூறுவது போல இயக்கம் என்றால் சதா இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதன்பொருள் படி நமது கழகம் இயங்கிக் கொண்டிருப்பதின் எடுத்துக் காட்டுகள் தான் நமது தலைமை கழக பேச்சாளர்களை வைத்து எல்லா மாவட் டங்களிலும் தலைமை கழக பொறுப் பாளர்கள் கருத்தரங்க நிகழ்வை நடத்திக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரி யது. மகிழ்ச்சிக்குரியது.நன்றிக்குறியது.


"உலக நல மருத்துவராம்" நம் தந்தை பெரியார் அவர்களின் "கொள்கை புத்த கமாக" இருந்து நம்மை வழி நடத்தும் "வாழ்வியல் தந்த வள்ளல்" ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில் அவர் காட்டும் திசையில் நன்றி உணர்வோடு பயணித்து நாம் வாழும் மனித சமுதாயம் பயண் பெற  பாடுபடுவோம்.


 - ஓமலூர் பெ.சவுந்திரராசன்.


கழகப் பொதுக்குழு உறுப்பினர்


No comments:

Post a Comment