கரோனா வைரசுக்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்களான ஜைடஸ் காடிலா, சீரம், பயோலாஜிக்கல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் மைன்வாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் இதுவரை விண்ணப்பித் தவர்களில் மூன்று நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
உலகளவில் 89 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பேரின் ஆய்வுகள் மனிதர்களிடையே இந்த மருந்தைச் சோதனை செய்யும் அடுத்த கட்டத்திற்குத் தேர்வாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி யில் அவர்களுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவனம் கைகோர்த்திருக்கிறது. உலகளவில் இதுபோன்ற ஏழு கூட்டு முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஹாமில்டனில் உள்ள ராக்கி மவுண்டன் ஆய்வக விஞ்ஞானிகள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசிகளை ஆறு 'ரீசஸ் குரங்கு'களுக்குச் செலுத்திச் சோதனை செய்தனர். 28 நாட்களுக்குப் பிறகும் எந்த வகையான கரோனா வைரசும் இவற்றைத் தாக்கவில்லை என்றும், அவை ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அட்ரியன் ஹில் தலைமையிலான குழுவும் ஏப்ரல் 23ஆம் தேதி தடுப்பூசி மூலம் மனித சோதனைகளைத் தொடங்கியுள்ளது. விலங்குகளிடம் நடத்தப்படும் இந்த சோதனைகளின் வெற்றி நிச்சயமாக, மனிதர்களுடனான சோதனைகளிலும் வெற்றி பெறும் என்று கூறமுடியாது. சோதனைக்கு உட்பட்ட கோவிட்-19 தடுப்பூசிக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களுக்குள் இந்த மருந் தினை மனிதப் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் திட்டமிட்டு உள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சோதனைகளை மேற்கொண்டு வரும் அதே வேளையில், இந்தியாவில் தனது தடுப்பூசி உற்பத்தியையும் தொடங்கப் போவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா அறிவித்துள்ளார்.
ஆய்வின் முடிவுகள் தெளிவாக வரும் முன்னரே, இதுபோன்ற தயாரிப்புகளில் ஈடுபடும் இந்த நிறுவனம், இவற்றை இந்தியர்களிடம் சோதனை செய்து பார்க்கவும், அதன் பின் வெளிநாடுகளில் விற்றுப் பணமாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தியா எந்த நாளிலும் தன்னிச்சையாக தனது மக்கள் நலன் கருதி முடிவெடுக்க முடியாதா?
கரோனா தொற்றின் எண்ணிக்கை மற்ற நாடுகளில் குறைந்து வரும் வேளையில், இந்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு மருத்து தயாரிக்கும் பணியை ஒப்படைத்து, அதைச் சோதனை செய்யும் களமாகத்தனது மக்களையே பயன்படுத்தி, வெளி உலகில் இந்தியர்களை ஒரு சோதனை எலி போன்றே பயன்படுத்துவது இவர் களின் நடவடிக்கையில் தெளிவாகத் தெரியவருகிறது. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் கரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடித்தால் நல்லது. ஆனால், அந்த மருந்து களை சோதனைக்களமாக எங்கள் நாட்டு மக்களை மாற்ற நினைத்தால், அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய நிலையில், "இந்தியாவில் பெரும் சோதனைகளை மக்களை வைத்தே செய்ய முன்வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும்."
இந்தச் சோதனையை யாரிடம் நடத்தப் போகிறார்கள் என்பது முக்கிய கேள்வியாகும். அப்பாவிகளையா? ஏழை எளிய மக்களையா? தானாக முன்வரக் கூடியவர் களையா? இதில் வெளிப்படைத் தன்மை முக்கியம். மற்ற நாடுகள் தயாராக இல்லாதபோது - இந்தியா மட்டும் மனிதர்களை சோதனை எலியாகப் பார்ப்பது மனிதாபி மானமற்றதே!
No comments:
Post a Comment