திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 6, 2020

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம்

அறிவியல் சாதனங்களால் பகுத்தறிவைப் பரப்புவோம்


கழகத் துணைத் தலைவர் உரை


ரூபாய் 45,500/- மதிப்புள்ள கழகப் புத்தங்கள் பெற்றிட முன்பதிவு



திருப்பத்தூர்,மே 6, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் 25.4.2020 அன்று மாலை நான்கு மணிக்கு காணொலி வழியாக சிறப்பாக நடைபெற்றது.


மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் வரவேற்று உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் பங்கேற்று திராவிடர் கழகம் என்பது ஓர் அறிவியல் இயக்கம் - அறிவியல் சாதனங்களைக் கொண்டு சனாதனவாதிகள் மூடநம்பிக்கை பரப்பி வரும் பொழுது, அறிவியல் இயக்கம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி பகுத்தறிவுக் கருத்துகளை பரப்புவதில் வியப்பேதுமில்லை. இயக்கம் என்றால் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும் என்பார் நமது தமிழர் தலைவர். கரோனா நெருக்கடி காலத்தில் கிடைத்திருக்கும் ஓய்வைப் பயன்படுத்தி நூல்களைப் படிக்கவும், படித்ததை குறித்து வைத்திட பழகிக் கொள்வதும் நன்மை பயக்கும் என்றும், அறிவாசான் தந்தை பெரியாரின் போர் முறைகளையும், தமிழர் தலைவர்அவர்களின் அணுகு முறையில் பெற்றுள்ள வெற்றிகளையும் விளங்கி நாற்பது நிமிடம் உரையாற்றினார்.


நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை செய ராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணிப் பொருளாளர் எ.அகிலா, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் எழில்.சிற்றரசு, மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ, மாவட்ட இணைச்செயலாளர் அரங்க.இரவி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சிராணி. மாவட்ட மகளிரணித் தலைவர் ம.கவிதா, மாவட்ட மகளிரணிச் செயலாளர் இ.வெண்ணிலா, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மு.இந்திராகாந்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வம், மண்டல இளைஞரணிச் செயலாளர் வண்டி.ஆறுமுகம், க.வெங்கடேசன், சே.ஜானகிராமன், இரா.பழனி, கே.டி. அசோகன், ஆம்பூர் வெற்றிகொண்டான், பி.கனிவாணன், தி.க.நாத்திகன், ஊற்றங்கரை பழ.பிரபு, காயத்திரி, வித்யா, கியூபா, அப்பாசாமி, குளோப், ஞானசேகரன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். உலகப் புத்தக நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் அவர்களின் 50 விழுக்காடு அளவில் அய்ந்து தொகுப்பு அடங்கிய கழக வெளியீடுகள் கிடைக்கும் என்ற அறிவிப்பை ஏற்று ரூ.46,500/- தொகைக் குரிய புத்தகங்களை பெற்றுக் கொள்வதாக தோழர்கள் அறிவித்தனர். அய்ந்து புத்தகத் தொகுப்புகள் அடங்கிய ரூ.1500 மதிப்புள்ள மொத்தத் தொகுப்பினை பதிவு செய்து கொண்ட தோழர்கள் பின்வருமாறு:


மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் - 5, மாவட்ட செயலாளர் வி.ஜி. இளங்கோ - 5, ஊற்றங்கரை பழ.பிரபு - 5


மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன் - 3, மண்டல இளைஞரணி தலைவர் வ.ஆறுமுகம் - 2, மாவட்ட கிளைச் செயலாளர் அரங்க.இரவி-1, ஆம்பூர் வெற்றிகொண்டான் - 1, ஊற்றங்கரை அப்பாசாமி - 1, மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன் -  1, மாவட்ட ப.க. தலைவர் கி தமிழ்ச்செல்வம்  - 1, மாவட்ட தி.க.துணைத் தலைவர் த. அசோகன் - 1, கலைவாணன் - 1, ஆசிரியர் வெங்கடேசன்- 1, பகுத்தறிவு ஆசிரியணி மாவட்டத் தலைவர் இரா. பழனி - 1, மாவட்ட மாடர்ன் ரேசனலிஸ்ட் வாசகர் வட்டத் தலைவர் இரா.பழனி- 1.


நிறைவாக சட்டக் கல்லூரி மாணவர் மத்தூர் மணிமொழி நன்றி கூறினார்.


நிகழ்வினை மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர்பாண்டியன் நெறிப்படுத்தினார்.


No comments:

Post a Comment