செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 6, 2020

செய்தித் துளிகள்....

* சென்னை முழுவதும் 198 தெருக்கள் மூடல்.


* பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசிகள் அதிகரிக்கும் ஆபத்து!


* கரோனா - குணமடைவோர் 28 விழுக்காடு.


* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை 26 இல் நடைபெறும்.


* பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்டு 25-க்குள் முடிக்கப்படும்.


* மே 18 ஆம் தேதிக்குள் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.


* மே 10 ஆம் தேதிவரை காய்கறி வியாபாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.


* தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரித்தமைக்கு சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு.


* இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 7.7 கோடி. ஆண்டுதோறும் தொற்று நோய்கள் இல்லாமல் மரணம் அடைவோரின் எண்ணிக்கை 58 லட்சம்.


* தமிழ்நாட்டில் வீட்டு வேலை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் பணிபுரிவதற்குத் தமிழ்நாடு அரசு தடை.


* இஸ்ரேல் - தேசிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக் கூடத்தில் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு.


* தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.


* டில்லி சாஸ்திரி பவன் இழுத்து மூடல்!


* கரோனா தொற்று நோய்ப்பற்றிய மருத்துவ ஆய்வுக்கு ரூ.61,500 கோடி வழங்கிட உலக நாடுகள் ஒப்புதல்.


No comments:

Post a Comment