செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

செய்தித் துளிகள்....

* ஏற்கெனவே இந்தியாவுக்கு ரூ.7,500 கோடி கடன் வழங்கிய உலக வங்கி அடுத்து இப்பொழுது மேலும் ரூ.7,500 கோடி கடன் வழங்குகிறது.


* கரோனா பரிசோதனைக்கு கருவிகள் வாங்க சீன நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருந்த ரூ.1.30 கோடி தொகையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.


* நடந்து செல்லும் தொழிலாளர்களைத் தடுக்க முடியாது, மாநிலங்களே முடிவு எடுக்கலாம் என்று கை விரித்துவிட்டது உச்சநீதிமன்றம்.


* தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித் தொகையில் (ரூ.3.90 லட்சம் பயனாளிகள்) ரூபாய் நூறினைப் பிடித்துக் கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


* போலீசார் அனைவரும் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


* சீனாவுக்கு எதிராக 18 அம்ச திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.


* அய்தராபாத் பணியாற்றிய கூலித் தொழிலாளி, மனைவி மகளுக்காக கைவண்டி ஒன்றைத் தயார் செய்து 700 கி.மீட்டர் இழுத்துச் சென்று மத்திய பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குச்  சென்றுள்ளார்.


* இந்தியாவில் கரோனா பரவல் தொடர்பாக முஸ்லிம்களை முன்னிறுத்தி அவதூறுப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று அமெரிக்க அரசின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் சம் பிரவுன்பேக் கூறியுள்ளார்.


* திருவள்ளுவர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பைவலசைக் கிராமத்தில் அம்மன் கோவிலில் அனுமதியின்றி பொங்கல் வைத்து வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது (ஊராட்சித் தலைவரும் கைது).


No comments:

Post a Comment