கவுதம புத்தரிடம் - அவரின் சீடரான பார்ப்பனர் வெசத்தா ஓர் அய்யப் பாட்டை எழுப்புகிறான்.
‘‘தன்னைப் போன்று பவுத்தத்தைத் தழுவிக் கொண்ட விதிவிலக்கான பிராமணர்கள், தங்கள் சுற் றத்தினால் அவமதிக்கப்படு கிறார்கள்'' என்று புத்தரிடம் கூறுகிறான்.
புத்தரின் பதில் கேள்வி: ‘‘எந்தச் சொற்களால் உங் களைப் பிராமணர்கள் பழிக் கிறார்கள்; வெறுக்கிறார் கள்?'' என்று கூறுமாறு கேட்கிறார் கவுதம புத்தர்.
இதோ சீடனின் பதில்:
‘‘பிராமணர்கள்தான் மிகுந்த உயர்ஜாதி, மற்ற வர்கள் கீழானவர்கள்; பிரா மணர்கள் மட்டுமே நல்ல நிறமுடையவர்கள். மேலா கப் பிறந்தவர்கள், பிராமணர் அல்லாதார் கருப்பர்கள், கீழாகப் பிறந்தவர்கள், பிரா மணர்கள் பிரம்மனால் உருவாக்கப்பட்டவர்கள். அவனது வாரிசுகள், ஆனால், நீ மிகச் சிறந்த சமூகத் தரத்தை விட்டுவிட்டு விலகி, கீழாகப் பிறந்தவர் களுடன் சேர்ந்துவிட்டாய், மழித்துக் கொண்ட பிச் சைக்காரர்கள், கீழ்ப்பணி யாளர், கருப்புத் தோல் கொண்ட அந்தக் காலில் பிறந்த பவுத்தர்கள், உன் உறவினர்களின் கால்களில் மிதிபடும் குப்பைகள் என்று சொல்கிறார்கள்'' என்றான் அந்தப் பார்ப்பன சீடன்.
கவுதம புத்தர் சிரித்து விட்டுச் சொல்கிறார்.
‘‘ஆமாம், வெசத்தா, பிராமணர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தை மறந்துவிட்டார்களா? பிரா மணப் பெண்களும் மாத விலக்கு அடைகிறார்கள், கர்ப்பம் தரிக்கிறார்கள், பிள்ளை பெறுகிறார்கள், பால் கொடுக்கிறார்கள். ஆனால், இதே பிராமணர் கள், பெண்ணுறுப்பின் வழி யாகப் பிறந்தவர்கள், பிரம் மனின் வாயிலிருந்து பிறந்த தாகச் சொல்லுகிறார்கள்.''
இதுதான் கவுதம புத்தரின் கருத்தாழமான பதில். கவுதமப் புத்தரின் சிந்தனை பகுத்தறிவின் பாற்பட்டது என்பதற்கு இந்தப் பதிலைவிட சிறந்த சான்று தேவைப்படாது.
ஒரு புத்த பூர்ணிமா அன்று (11.5.1998) பொக் ரானில் மூன்று அணுகுண்டு களை வெடிக்க வைத்தாரே ‘பிராமணீய' ஆட்சியின் பிதாமகன் அடல்பிகாரி வாஜ்பேயி, அம்பேத்கர் பிறந்த நாளில் பாபர் மசூ தியை இடிக்கவில்லையா? இரண்டையும் இணைத்துப் பாருங்கள், வரலாறு புரியும்!
- மயிலாடன்
No comments:
Post a Comment