* இந்தியா - சீனா எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க சமரசம் செய்ய அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு.
* தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டிற்காக 17 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு.
* தமிழகத்தில் 4,23,000 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது!
* சென்னை விமான நிலையத்திலிருந்து 16 நகரங்களுக்கு 44 விமான சேவை.
* பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியதால், ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியாகும்.
* அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை!
* வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்குப் பயன்படுத்திவிட்டு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என நீதிபதிகள் கருத்து.
* இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் கல்லூரிகள், கட்டண விருப்பங்களைப் பரிசீலிக்க பல்கலை மானியக் குழு அறிவிப்பு.
* மகளிர் சுய உதவிக் குழு மூலமாக ஒரு கோடி முகக் கவசங்கள் மக்களுக்கு விநியோகமாம்.
* இந்தியாவில் ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் விமானங்களில் பயணம்.
* சமூக செயற்பாட்டாளர்களை பிணையில் விடுதலை செய்ய வைகோ வேண்டுகோள்.
* தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மின்சாரத் தேவை அதிகரிப்பு.
* வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.
No comments:
Post a Comment