செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

செய்தித் துளிகள்....

* பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில்.


* ஊரடங்கு காலகட்டத்தில் 500 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்.


* உ.பி.யில் கல்வித் துறையில் மிகப்பெரிய ஊழல் - பிரியங்கா குற்றச்சாட்டு.


* போக்குவரத்து விதி மீறல் - சென்னையில் 1192 வழக்குகள்.


* சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் நிவாரணத் தொகை.


* இந்தியா - ஜப்பான் இணைந்து 2023 இல் நிலவு  குறித்து ஆய்வுத் திட்டம்.


* பருவ நிலை மாற்றத்தால் இந்நூற்றாண்டின் இறுதிக்குள் கோடை காலங்களில் அனல் காற்று 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கும் - மத்திய அரசு.


* கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீனா - முகம்மது மது ரியாஸ் திருமணம் எளிமையாக நடந்தது- இது ஒரு மத மறுப்புத் திருமணமாகும்.


* கரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்தக் கோரி மதுரையில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்ப்பாட்டம்.


* சென்னையில் மீன் விற்பனையில் சிக்கல் இருப்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.


* இந்தியாவைவிட சீனா, பாகிஸ்தானில் அதிக அணு ஆயுதங்கள் - சர்வதேச சிந்தனைக் குழு தகவல்.


* மிகவும் பாதிக்கப்பட்ட மும்பையின் தாராவி பகுதி- கரோனாவைக் கட்டுப்படுத்தியதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.


No comments:

Post a Comment