சென்னை,ஜூன்19, ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்ற அரசாணை திரும்பப் பெறப்பட்டது என்றும், திருத்தம் செய்து மீண்டும் 3 நாள்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துக் கேட்டு, புதிய அரசாணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப 1018 ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றும் அரசின் உத்தரவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சட்டப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது தமிழில் அழைக்கக்கூடிய ஊர்களின் பெயரை ஏற்றாற் போலவே ஆங்கிலத்திலும் அந்த சொற்களின் எழுத்து அமைக்கப்பட்டு ஒலி புணர்ந்து 1018 ஊர்களின் பெயர்களை மாற்றி அமைக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் அடிப்படையிலும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு சீராக ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோயம்புத்தூர், வேலூர் என்ற மாவட்டங்களின் ஆங்கில சொற்தொடரும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெளியீடு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆட்பட்டிருந்தது. அதாவது பல ஊர்களின் பெயர் சீராக இல்லை, சொற்றொடர் தவறாக உள்ளது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இத்தகைய சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தற்போது அமைச்சர் பாண்டியராஜன் இந்த பதிவைக் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் தெரிவித்ததாவது: இந்த அறிவிப்பு மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அதை தொடர்ச்சி யாக ஆராய்ந்து அதில் சில மாற்றங்கள் செய்து 3 நாட்களுக்குள் திருத் தங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒரு புதிய அரசாணை வெளி யிடப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை திரும்பப்பெற்று கொள்வ தாகவும் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர்: ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்
மணிப்பூர், ஜூன் 19 ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி மணிப்பூர் மாநில ஆளுநரை சந்தித்து முன்னாள் முதல்வர் ஓ இபோபி சிங் கடிதம் அளித்துள்ளார்.
மொத்தம் 60 இடங் களைக் கொண்ட மணிப்பூர் சட்டப் பேர வைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங் களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிருந் தாலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை ஆதர வுடன் பா.ஜ.க. தனது ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. முதலமைச்சராக பிரேன் சிங் பொறுப்பேற்றார். இதனிடையே நேற்று திடீர் திருப்பமாக பா.ஜ.க. கட்சியின் மிக முக்கிய ஆதரவு கட்சியான தேசிய மக்கள் கட்சி, டி.எம்.சி கட்சி மற்றும் சுயேட்சையாக ஜிரிபாம் தொகுதியில் நின்று வென்ற எம்.எல்.ஏ ஆகியோர் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றனர்.
இதனை தவிர பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். விரைவில் இவர்கள் காங்கிரஸில் இணையப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள், தங்களது ராஜினாமா தங்களது தனிப்பட்ட முடிவில் எடுக்கப் பட்டது எனக் கூறினர். மேலும் இதற்கான காரணத்தை கேட்ட தற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர். 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விலகலால் பா.ஜ.க. அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பா.ஜ.க. தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது.
இதுஒருபுறம் இருக்க, மணிப்பூரில் உள்ள ஒரே மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஆளும் பாஜகவும், காங்கிரசும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், மணிப்பூர் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரி உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டமன்றத்தை கூட்டவும், பெரும்பான்மை உள்ள தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவும் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக மணிப் பூர் ஆளுநரை முன்னாள் முதல்வர் ஓ இபோபி சிங், சந்தித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரிய கடிதத்தையும் அவர் வழங்கியுள்ளார்.
ஜூலை முதல் வாரத்தில் பிளஸ்2 ரிசல்ட்!
சென்னை, ஜூன் 19 'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், கரோனா வைரஸ் பிரச்சினைக்கு மத்தியில் நடத்தப் பட்டு, மார்ச் 24ல் முடிந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்டோர், இந்த தேர்வை எழுதினர். தேர்வின் விடைத்தாள்கள் திருத்தம், இரண்டு வாரங்களுக்கு முன் முடிந்தது. இதை தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு விடைத்தாளுக்கும் வழங்கப்பட்ட மதிப் பெண்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதி மதிப்பெண் பட்டியல், இம்மாத இறுதியில் தயார் செய்யப்படும். இந்நிலையில், ஜூலை முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment