சகோதரர் ஜெ.அன்பழகன் நலம் பெற விழைகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

சகோதரர் ஜெ.அன்பழகன் நலம் பெற விழைகிறோம்!


சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப் பினரும், தி.மு.க.வின் தென் சென்னை மாவட்டச் செயலாளரு மான சகோதரர் ஜெ.அன்பழகன் கரோனாவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பிரபல ரேலா ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்குமுன் வந்த செய்திகள் - தி.மு.க. தலைவரைப் போலவே நமக்கும் மிகவும் கவலையும், வருத்தமும் அளிப்பதாக இருந்தது; அவர் எப்படியும் குணமடைந்து பழையபடி தனது பொதுவாழ்வைத் தொடர வேண்டு மென்று விழைந்தோம்.


அவர் உடல்நலம் தேறி வருகிறார் என்று, நேற்று (5.6.2020) அவருக்குச் சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவ மனையின் டாக்டர் ரேலா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது!


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைபேசியில் அவரது நலம் விசாரித்ததும், எந்த உதவிகளையும் செய்வதற்கு அரசு தயார் என்று அறிவித்ததும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் பார்த்துவிட்டு, செய்தி யாளர்களிடம் ஜெ.அன்பழகன் அவர்களுடைய நலம்பற்றி விளக்கமும் அளித்தார்; பொதுவாழ்வில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதுபோல ஒரு நல்ல பண்பாடு வளர வேண்டும் என்பதே நம் போன்றவர்களின் விழைவும், விருப்பமும் ஆகும். பாராட்டத்தக்க முன்மாதிரியும் இது.


சகோதரர் அன்பழகன் தனது உடல்நலம்பற்றிக் கவலை கொள்ளாது உழைத்ததால் ஏற்பட்ட தொற்றிலிருந்து  விடுபட்டு நல்ல உடல்நலத்தோடு மருத்துவமனையிலிருந்து வெளி வர வேண்டுமென்று தாய்க்கழகம் பெரிதும் விரும்புகிறது.


தி.மு.க. தலைவரின் கவலை, கரிசனம், கடமை உணர்வு பாராட்டத்தக்கது, மிகவும் எடுத்துக்காட்டானது!


 


கி.வீரமணி


திராவிடர் கழகம்


தலைவர்,


சென்னை


6.6.2020 


 


No comments:

Post a Comment