கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஜூன் 25 வரை ரூ.382.89 கோடி கிடைத்துள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 17, 2020

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஜூன் 25 வரை ரூ.382.89 கோடி கிடைத்துள்ளது

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்


சென்னை, ஜூலை 17- கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஜூன் 25 வரை ரூ.382.89 கோடி கிடைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


கரோனா நிவாரண நிதி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக நிதித்துறைத் துணை செயலரும், முதல்வர் பொது நிவாரண நிதி பொருளா ளருமான பரிமளா செல்வி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ரூ.10 லட்சத்திற்கு மேல் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டி யல் இணையதளத்தில் உள்ளது. ரூ. 10 லட்சத்துக்கு குறைவாக நிதி கொடுத்த வர்களின் விவரங்களை சேகரிப்பதில் சிரமம் உள்ளது என விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment