பெரியார் கேட்கும் கேள்வி-44 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 14, 2020

பெரியார் கேட்கும் கேள்வி-44

கோவில்கள் எதற்கு?



மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குட மாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு?


இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும் படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு? லக்ஷம் 10 லட்சம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு? தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு?


இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக் கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை அய்.சி.எஸ்., அய்கோர்ட் ஜட்ஜி திவான்களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.


இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டுகளை யும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதி களாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன்.


- தந்தை பெரியார், குடிஅரசு, 5.12.1937


- ‘மணியோசை’


No comments:

Post a Comment