கோவை சுந்தராபுரத்தைத் தொடர்ந்து திருக்கோயிலூரில் தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை!  காவிகளின் காலித்தனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

கோவை சுந்தராபுரத்தைத் தொடர்ந்து திருக்கோயிலூரில் தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை!  காவிகளின் காலித்தனம்!


கோவை சுந்தராபுரத்தில் 16 ஆம் தேதி இரவு தந்தை பெரியார் சிலையின்மீது காவிக் காலிகள் காவிச் சாயத்தை ஊற்றி, தங்களின் கீழ்ப்புத்தியைக் காட்டினர். அனைத்துக் கட்சியினரும் ஆர்ப்பரித்து எழுந்தனர். கோவையில் மட்டுமல்ல - தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.சந்திரசேகரன் காவல்துறையில் புகார் மனு கொடுத்தார்.


அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது - காலிகளின் கொட்டத்திற்கு என்னதான் முடிவு என்று கண்ட அறிக்கைகளை வெளியிட்டனர்.


நேற்று (17.7.2020) பாரத் சேனா என்ற அமைப்பின் செயலாளர், கோவை தெற்கு மாவட்டம் போத்தனூரைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்ற ஆசாமி (வயது 21) காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். 153, 153-A   (1)(b), 504 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு சிறையில் அடைக்கப்பட்டான்.


திருக்கோயிலூரிலும்


திருட்டுத்தனம்!


கல்லக்குறிச்சி மாவட்டம் திருக் கோயிலூரிலும் நேற்று (17.7.2020) தந்தை பெரியார் சிலைக்குக் காலிகள் செருப்பு மாலை போட்டுள்ளனர். தகவல் தெரிந்ததும், திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். செருப்பு மாலையைத் தூக்கி எறிந்தனர். திருக்கோயிலூர் நகர திராவிடர் கழகத் தலைவர் தி.பாலன் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


கருத்தைக் கருத்தால் சந்திக்க இயலாத கோழைகளான காவிக் கயவர்களின் இந்தக் காலித்தனத்தால் மக்கள் மத்தியில் அம்பலப் படுத்தப்படுவதுதான் மிச்சம்!


No comments:

Post a Comment