"என்றும் வெல்லும் பெரியார் சொல்" தலைப்பில்
காணொலியில் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரை
பஹ்ரைன், ஜூலை 19, பஹ்ரைன் தி.மு.க. சார்பில் தலைவர் கலைஞர் 97ஆவது பிறந்த நாள் விழா காணொலியில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.நேற்று (16.7.2020) நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்றார். "என்றும் வெல்லும் பெரியார் சொல்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தி, வெளிநாடுவாழ் தமிழர்களிடம் கலந் துரையாடினார்.
திராவிடம் பற்றி நூல்களை இன்னும் நாம் அதிகம் படிக்க வேண்டும் என்றும், ஆதிக்க சக்தி களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எவ்வாறு பதில் கூறவேண்டும் என்றும், குழந்தைகளுக்கு எப்படி தந்தை பெரியாரைப் பற்றி படித்து கொடுக்க வேண்டும் என்றும் சுமார் 50க்கும் மேற் பட்ட வெளிநாடுவாழ் தமிழர்களுடன் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் கலந்துரையாடினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் பஹ்ரைன் திமுக சார்பில் முத்துசாமி, குடந்தை ஆரிஃப், ஜோதிபாசு, வி.ஆர்.சின்னசாமி, மேலாப்பூந்தை இஸ்மாயில், அசோக், சிங்கமுத்து, திருமேனி, சண்முகநாதன், காசை லெனின்,சுதாகர், லண்டன் திமுக சார்பில் முஹம்மது பைசல், செந்தில்குமார், அமீரக திமுக சார்பில் பாவை அனிபா, செந்தில் ரங்கராஜன், கத்தார் திமுக சார்பில் அறந்தை ராஜு முருகன், ஆரூர் பாலா, சவூதி திமுக, சேலம் சிக்கந்தர், அபுரயான், ஓமன் திமுக சார்பில் பாலூர் தேவா, சவுகத், குவைத் திமுக சார்பில் சித்திக், முஹம்மது, மலேசிய திமுக ஹமீது மற்றும் தளபதி பேரவை சார்பில் ஜைனுத்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment