மேட்டூர், ஜூலை 19 காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதி கரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது காவிரி டெல்டா பாச னத்துக்கு தண்ணீர் திறந்து விடப் பட்டு வருகிறது. நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 300 கனஅடிக்கு குறைவாகவே வந்தது. கடந்த 15-ஆம் தேதி வினாடிக்கு 199 கனஅடி தண்ணீரும், 16-ஆம் தேதி வினாடிக்கு 202 கனஅடி தண்ணீரும் வந்தது.
இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன்படி நேற்று அணைக்கு வினாடிக்கு 803 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
No comments:
Post a Comment