டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- அயோத்தி ராமன் கோவில் பூமி பூஜைக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் உள்ள மண் கொண்டு செல்லப்படுகிறது.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- இணையம் வழியே நடைபெறும் சூதாட்டத்தை தடை செய்திட தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் வலி யுறுத்தியுள்ளது.
தினகரன், சென்னை:
- சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டால், தமிழ் நாட்டில் பா.ஜ.க. துடைத்தெறியப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- ராஜஸ்தானில் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் மத்திய அரசையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சச்சின் பைலட் தரப்பின் கோரிக்கையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, மத்திய அரசை மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டது.
தி இந்து, டில்லி:
- தற்போது 8.5 சதவீதமாக உள்ள அரசு வங்கிகளின் வாராக் கடன், வரும் மார்ச் 2021-க்குள் 14.7 சதவீதமாக அதிகரிக் கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.
- ராஜஸ்தான் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது சபா நாயகர் பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, அம் மா நில முதல்வர் அசோக் கேலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திவாலா சட்டம், ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களைப் பறிக்கிறது என அவ் வங்கி யின் மேனாள் கவர்னர் உர்ஜித் படேல் அண்மையில் வெளியிட்டுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
25.7.2020
No comments:
Post a Comment