மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப் பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:
தீர்ப்பு அளித்த நாள்: 27.7.2020
- மாநில சட்டங்களின் அடிப்படையில் இட ஒதுக் கீட்டை அளித்திட, இந்திய மருத்துவக் குழு இயற்றிய விதிகள் [(9(4), 5(5)], அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்க வில்லை. (பாரா 85).
- மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்திய மருத்துவக் குழு, பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப் பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு எந்த விதியையும் குறிப்பிட இயலவில்லை. (பாரா 86).
- ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக் கொள் கையைச் சட்டமாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதி காரங்கள் உள்ளன. அதன் சட்டமன்ற அதிகாரங் களைப் (Legislative Powers) பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்பட வில்லை. (பாரா 87)
- யுஜி / பிஜி மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் பங்களித்த அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு வழங்க எந்தச் சட்டமோ அல்லது அரசமைப்புச் சட்டமோ தடை யாக இல்லை. (பாரா 90).
- அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இடஒதுக் கீடு இல்லை என்பதை மாநில அரசுகள் அறிந்தி ருப்பதாக MCI-இன் வாதத்துக்கு மறுப்பாகத் தமிழக அரசு இட ஒதுக்கீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. (பாரா 95).
- இந்திய மருத்துவக் குழு, மாணவர் சேர்க் கைக்கான தரங்களை நிர்ணயிக்க முடியும். ஆனால், இடஒதுக்கீட்டுக் கொள்கை அரசாங்கத்தின் சட்டத் தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். (பாரா 97).
- தமிழக மனுதாரர்களின் மனுவில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் யோசனைக்கு மாறாக உள்ளது. (பாரா 98).
- சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றைப் பாதுகாப் பதற்கான முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எம்.சி.அய்.யும் மத்திய அரசு புறக் கணிக்க முடியாது. (பாரா 102).
- இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அரசமைப்புக் கடமை உள்ளது. இது இப் போது அவசியமாக உள்ளது. (பாரா 104).
- மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு- (மத்திய அரசின் சுகாதாரச் செயலாளர், எம்.சி.அய். மற்றும் தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர்) இட ஒதுக்கீடு சதவிகிதத்தை முடிவு செய்ய அமைக்கப்பட வேண்டும்.
- செயல்படுத்தல் தற்போதைய கல்வியாண்டில் அல்ல, எதிர்கால ஆண்டுகளிலும் செய்யலாம். (பாரா 105).
- இடஒதுக்கீடு சதவிகிதத்தை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் வழிமுறைகளை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும். (பாரா 106).
தொகுப்பு: கோ.கருணாநிதி
No comments:
Post a Comment