சமூகநீதி - இட ஒதுக்கீட்டின் சரித்திரநாயகர் சாகுமஹராஜ் நினைவைப் போற்றி சமூகநீதி காப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

சமூகநீதி - இட ஒதுக்கீட்டின் சரித்திரநாயகர் சாகுமஹராஜ் நினைவைப் போற்றி சமூகநீதி காப்போம்!


முன்பு மராத்திய பிரதேசம், கோல் ஹாப்பூர் என்ற சமஸ்தானத்தின் அர சராக ஆண்ட மாவீரன் சிவாஜியின் பாரம்பரியத்தில் வந்த சத்திரபதி சாகுமஹராஜ் அவர்கள் மிகப்பெரிய சமூகப் புரட்சியாளர் ஆவார்!


இந்தியாவின் அய்ந்து பெரும் சமூகப் புரட்சியாளர்கள்.


(காலவரிசைப்படி)



  1. ஜோதிபாபூலே - 1827-1890 (மகராட்டிரா)

  2. நாராயணகுரு - 1856 - 1928 (கேரளா)

  3. சாகுமஹராஜ் - 1874-1922 (கோலாப்பூர் அரசர்)

  4. தந்தை பெரியார் - 1879-1973

  5. டாக்டர் அம்பேத்கர் - 1891 - 1956


இவர்களில் ஒருவரும், சமூகநீதிப் புரட்சியாளருமான சத்திரபதி சாகு மஹராஜ் அவர்கள் சமூகநீதிக் கொடியை இந்தியாவிலேயே - 1902 ஆம் ஆண்டு இதே நாளில் (26.7.1902) தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனி இடப் பங்கீடு 50 விழுக்காடு தந்து அரசு ஆணை பிறப் பித்த முன்னோடியாவார்!


அவரது கோலாப்பூர் சமஸ்தா னத்தில் 118 ஆண்டுகளுக்கு முன்பே இதனை நடைமுறைப்படுத்தி இந்தி யாவிற்கே வழிகாட்டிய சமூகப் புரட்சி யாளர்!


இவரது இந்த சமூகநீதி - இட ஒதுக்கீட்டு ஆணையை அன்றைய திலகரது ஏடான ‘கேசரி' மற்றும் பல பார்ப்பன ஏடுகளும், அதிகாரவர்க்கத் திலிருந்து பார்ப்பனர்களும் கடுமை யாக எதிர்த்தும் அதை லட்சியம் செய்யாமல், தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட சமூகத்தவர்கள் கல்வியிலும், உத்தியோகங்களிலும் முன்னேறினால் தான், சமூகம் முன்னேற்றம் அடையும் என்று முழங்கி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்ததோடு, பல மாணவ விடுதிகளையும் கட்டி, கல்விக் கண்ணை அவர்களுக்குத் திறந்தவர்.


பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய வர்.


சூத்திரரான மன்னர் சாகுவுக்கு வேத மந்திரங்களுக்குப் பதிலாக புராண மந்திரங்களை, தான் குளிக்கும் போது ஓதிய நிகழ்ச்சியை எதிர்த்து, வேத மந்திரங்கள், பிராமணர்களுக் கும், க்ஷத்திரியர்களுக்கும் மட்டுமே ஓதப்படல் வைதிக சம்பிரதாயம் என்பதை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கி, அந்நாளில் அதை மாற்ற மறுத்ததற்காக அவர்களுக்கு இனா மாக அளிக்கப்பட்ட நிலங்களைப் பறிமுதல் செய்தார் - (சங்கராச்சாரி யார்கள் நிலம் உள்பட) அவர்கள் பிரிட்டிஷ் அரசுவரை சென்று மேல் முறையீடு செய்தும், சாகுவே வென்றார்!


பார்ப்பனரின் வருணதர்மத்தின் வைரியாக, ஜோதிபாபூலேவின் கொள்கைகளைப் பரவச் செய்த பெரும் புரட்சியாளர் சாகுமஹராஜ் அவர்கள் - இந்தியாவின் இட ஒதுக் கீட்டிற்கு இவரே முன்னோடி ஆவார்!


அதை இந்நாளில் நினைவூட்டி சாகுமஹராஜ் காட்டிய வழியைப் பலப்படுத்தி சமூகநீதிக்கு ஏற்படும் இன்னல்களை எதிர்கொள்ள உறுதி பூணுவோம்!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


26.7.2020


சென்னை


குறிப்பு: இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியில் காணொலி வழியாகத் தமிழர் தவைர் உரை நிகழ்த்துகிறார்.


No comments:

Post a Comment