செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 20, 2020

செய்தித் துளிகள்....

* ராஜஸ்தானில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் காங்கிரஸ் திட்டம்!


* கோவில்களில் திருவிழாக்களை நடத்தலாம் - பக்தர்கள் காணொலிமூலம் பார்க்கலாம் - இந்து அறநிலையத் துறை ஆணை.


* புதிய பாடத் திட்டம் - கேள்விகள் கடுமையாக இருந்ததால், இவ்வாண்டு +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு!


* சென்னையில் பிளாஸ்மா வங்கி நாளை முதல் செயல்படும்.


* சென்னையில் - 59 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 - தமிழ்நாடு அரசு.


* கரோனாவால் உயிர் இழந்த பாலிசிதாரர்களுக்கு 24 மணிநேரத்தில் இழப்பீடு - எல்.அய்.சி. மண்டல மேலாளர் அறிவிப்பு.


* கரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 100 டாக்டர்கள் மரணம்!


* இன்று ஆடி அமாவாசை - நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்யத் தடையாம்! (பாவம் - பிதுர்களின் பாடு திண்டாட்டம்).


*கரோனா: வருமானமில்லாததால் ஓட்டுநர்களின் தற்கொலை - தமிழ்நாட்டில் அதிகரிப்பு!


* பொய்யை நிறுவனமாக்கி விட்டது - மத்திய அரசுமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!


* பி.ஜே.பி. ஆளும் கருநாடகாவில் கரோனா வார்டில் பன்றிகளின் ‘உலா!'


No comments:

Post a Comment