கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 28, 2020

கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சி பெயர் பலகையை காவி பூசி அவமதித்த ஆர்.எஸ்.எஸ். காலிகளை கண்டித்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் பொது மக்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேற்படி கல்வராயன் மலையில் உள்ள இந்நீர்வீழ்ச்சிக்கு 'பெரியார் நீர்வீழ்ச்சி' என தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெயர் சூட்டப்பட்டது. தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இவ்வருவியில் குளித்தும் அதன் பேரழகைக் கண்டும் புகழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட அருவியை 'பெரியார்' பெயரில் அமைந்ததால் ஆர்.எஸ்.எஸ். சமூக விரோதிகள் பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையை காவி பூசி அழித்துள்ளனர். இதனைக் கண்டித்து கல்லக்குறிச்சி, சங்கராபுரம், பாக்கம்புதூர், சு. குளத்தூர் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இக்கண்டன ஆர்ப்பாட்டங்களில் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர், மாவட்டத் துணைத் தலைவர் ஓவியர் மு.கலைச்செழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நா.பெரியார், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன், சங்கராபுரம் ஒன்றியத் தி.க. தலைவர்


பெ. பாலசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment