சென்னை,ஜூலை29, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை தமிழக அரசால் செலுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை,ஜூலை29, தொலைதூரக் கல்வியில் இணையவழி மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத் தில் 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை (எம்பிஏஉட்பட), டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் தொடங்கியுள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் www.online.ideunom.ac.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இத்தகவலை, பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஆக.1 முதல் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் !
அகமதாபாத், ஜூலை 29, கரோனா தொற்று வைரசுக்குத் தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. தற்போது, தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதால், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றின் மூலமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இதனால், முகக்கவசம் அணிவதை பல நாடுகள் கட்டாய மாக்கியுள்ளன. இந்தியாவிலும் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெளியிடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்திலும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிய குஜராத் மாநில அரசு, மீறும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தையும் உயர்த்தியுள்ளது. அதன்படி மாநிலத்தில் முகக்வசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் அபராதமானது 200 ரூபாயில் இருந்து 500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
79 தொழில்முறை கல்லூரி மூடல்: ஏஅய்சிடிஇ தகவல்
புதுடில்லி,ஜூலை29, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: கரோனா தாக்கம் காரணமாக 2020 - 2021 நடப்பு கல்வி ஆண்டில், இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் மற்றும் வணிகப் பள்ளிகள் உட்பட 179 தொழில்முறை கல்லூரிகள், வேலை வாய்ப்புகள் இல்லாததாலும் கரேனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு 179 தெழில்முறை கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கடந்த 9 ஆண்டுகளில் மிக அதிகம்.
நடப்பு ஆண்டில், மேலும் 134 நிறுவனங்கள் புதிய படிப்புகளுக்கு அரசிடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை. தற்போதைய நிலையில், வருடாந்திர ஒப்புதல் செயல்பாட்டில் ஒரு நடைமுறை மாற்றம் அவசியமானது என்பதால் அது ஏஅய்சிடிஇ-யால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதே நேரம் புதிய படிப்புகளுக்கு ஒப்புதல் பெறாதது கரோனா வைரஸ் தாக்கம் உயர்கல்வித் துறையை கடுமையாக பாதித்துள்ளது என்பதை காட்டுகிறது. ஊரடங்கு அனைத்து துறைகளுக்கும் கடும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சவாலை சந்தித்து மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னணு நிர்வாகத்தை ஏஅய்சிடிஇ மேற்கெண்டுள்ளது. இதன் மூலம் பயணம் இல்லாமல் செலவுகள் குறைவதேடு, நம்பகத் தன்மையையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment