பா.ஜ.க.மீது மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சாடல்
மும்பை, ஜூலை 29- மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தனது 60ஆவது பிறந்த நாளையொட்டி சிவசேனாவின் அதிகாரப் பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங் கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையானவை. 3 கட்சிகளின் அனுப வத்தில் இந்த அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
எனது தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்காலம் எதிர்க்கட்சிகளின் கைகளில் இல்லை. இந்த கூட்டணி அரசு முச்சக்கர வண்டி (ஆட்டோ). இது ஏழைகளுக்கான வாகனம். அதன் ஸ்டீயரிங் என் கைகளில் உள்ளது. மற்ற இருவரும் (தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) பின்னால் அமர்ந்து இருக்கிறார்கள்.
உங்களுக்கு (எதிர்க்கட்சியான பா.ஜ.க.) இந்த அரசைக் கவிழ்ப்பதில் இன்பம் கிடைத்தால் இப்போதே கவிழ்த்து விடுங்கள். ஊகிக்கப்படுவது போல் செப்டம்பர், அக்டோபர் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? சிலர் ஆக்கப்பூர்வமானப் பணியை செய்வதில் இன்பம் அடைகிறார்கள். ஆனால் சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார் கள்.
மகா விகாஷ் அகாடி கூட்டணி ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிராக உரு வாக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் கவிழ்த்தால்அது ஜனநாயகமாகி விடுமா? நான் கொள்கையில் இருந்து பிறழவில்லை. ஒரு கூட் டணியில்தான் சேர்ந்து இருக்கிறேன்.
இந்தக் கூட்டணி அரசில் காங்கிரஸ் புறக்கணிக் கப்படுவதாக உண்டான பிரச்சினை அக்கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப்பின் தீர்க்கப் பட்டது. சரத்பவாருடன் எனக்கு நல்ல ஒருங்கி ணைப்பு உள்ளது. நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment