கரோனாவால் கல்வி நிலையங்கள் மூடல்; 100 கோடி மாணவர்கள் பாதிப்பு அய்.நா. தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

கரோனாவால் கல்வி நிலையங்கள் மூடல்; 100 கோடி மாணவர்கள் பாதிப்பு அய்.நா. தகவல்


கரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள் ளதால், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. வரலாற்றில் இல்லாத வகையில் கல்வியில் பெரும் பாதிப்பை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.  160க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக 100 கோடி மாண வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment