ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை, ஆக. 18- தமிழகத்தில் 16ஆவது சட்டமன்ற தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், அதற்கான பணிகளை தொடங்க தேர்தல் ஆணை யம் தயாராகி வருகிறது. அதன்படி ஊரடங்கு முடிவடைந்ததும் அடுத்த மாதம் தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய டிசம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள்
திறப்பது பெரும் தவறு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஆக. 18- சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுக தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டுரைப்பதிவில் கூறியிருப்பதாவது, சென்னை தவிர பிற மாவட்டங்களில் #சிஷீஸ்வீபீ19 பரவியதில் டாஸ்மாக்குக்கு பெரும் பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண் டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் காவலர் தேர்வு முறைகேடு
விசாரணைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
சென்னை, ஆக. 18- தமிழகத்தில் கடந்த ஜனவரியில் நடந்த காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் படி 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றின் போது பார்வையற்றோரின்
பாதுகாப்புக்கான கண் மருத்துவ மாநாடு
சென்னை,ஆக.18- இந்தியாவின் முன்னணி தொழில்துறை சங்கம் மற்றும் விஷன் 2020, கண் தொடர்பான பல்வேறு நோய்களால் சமரசம் செய்யப்பட்ட பார்வையில் வாழும் மக்களுக்கு தொற்று நோயின் தாக்கத்தை எடுத்துக்காட்டு வதற்காக பல பங்குதாரர் மாநாட்டை ஏற்பாடு செய்தன.
உலகில் பார்வையற்றோரின் மிக உயர்ந்த விகிதத்தில் இந்தியா உள்ளது, இது சுமார் 4.8 மில்லியனாக உள்ளது. இந்தியாவில் பார்வையற்ற தன்மை (92.9%) மற்றும் பார்வைக் குறைபாடு (96.2%) ஆகியவை தவிர்க்கக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் ஏற்படுகின்றன என இந்த மாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பனீந்திர பாபு நுக்கெல்லா தெரிவித்துள்ளார்.
வீட்டுக் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் உயர்வு
சென்னை, ஆக.18 கடந்த ஏப்ரல் முதலாக, அடிக்கடி மிதமான-அளவில் நிலநடுக்கம், அவ்வப்போது டில்லியின் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்டு வருகிறது. இதனால், இங்கு வசிக்கும் மக்கள் தமது வீடுகளை காப்பீடு செய்வது பற்றி யோசிக்க தொடங்கியுள்ளனர்.
இத்தகைய நிச்சயமற்ற வாழ்க்கைச் சூழலில், நிலநடுக்கம் பற்றிய கவலை காரணமாக, டெல்லி உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள மக்களில், 42 சதவீதம் பேர் எதிர்காலத்தில் வீட்டுக் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், பாலிசி பஜார்.காம் என்று இணையதள சர்வேயில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும் இந்நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் சந்தைக் களமான இங்கு, வீட்டுக் காப்பீடு பற்றிய புரிதலை நுகர்வோ ருக்கு ஏற்படுத்தித் தரப்படுகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட
மாணவர்களுக்கு அலைபேசி வழங்கல்
சென்னை, ஆக.18 எம்அய் இந்தியா அதன் விநியோகஸ் தர்கள் மற்றும் சில்லறை கூட்டாளர்களின் வலைப் பின்னலுடன் இணைந்து தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்க ளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2500 புத்தம் புதிய ஸ்மார்ட் போன்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
நிறுவனத்தின் 2500க்கும் அதிகமான மற்றும் வலுவான பிரத்தியேக சில்லறை நெட் வொர்க் இந்த 2500+ ஸ்மார்ட்போன்களை இந்த முயற்சியின் கீழ் நன்கொ டையாக அளிக்கும். இணை தளம் மூலம் கற்றல் மற்றும் கல்விக்காக இந்த ஸ்மார்ட் போன்களை குழந்தைகள் பெற முடியும் என்பதை உறுதி செய்வதற்காக எம்அய் இந்தியா டீச் ஃபார் இந்தியா வுடன் கூட்டு சேர்ந்துள்ளது என இக்கூட்டாண்மை குறித்து பேசிய இந்நிறுவன தலைமை இயக்க அதிகாரி முரளிகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment