20ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

20ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை, ஆக .4- கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங் கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளதால் வாடிக்கையா ளர்களுக்கு முழுமையான வங்கி சேவைகளை அளிக்க வேண்டும். இதற்காக வங்கி ஊழியர்கள் 100 சதவீதம் அதாவது முழுமையாக பணிக்கு திரும்பவேண்டும். குறிப்பாக விதிவிலக்கு அளிக்கப்பட்டி ருந்த கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளும் பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு வங்கி நிர்வாகக்குழு உத்தர விட்டு உள்ளது.


இதற்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர் பாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது. இதில் வருகிற 20ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அகில இந் திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங் கடாச்சலம் கூறியதாவது:-


தமிழகத்தில் மாநகர், புற நகர் மற்றும் கிராமப்பகுதி களில் உள்ள வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வங்கி ஊழியர்கள், அதிகாரி கள் அதிகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். தற்போது 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல் வங்கிகள் செயல்பட் டால், தொற்று அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது.


எனவே கேரளா, கரு நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை போல, வங்கிகளில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்கவேண்டும். ஊரடங்கின் போது, அனைத்து சனிக்கிழமைகளி லும் விடுமுறையும், பணி நேரத்தை காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அனைத்து வங்கி கிளைக ளிலும் வார இறுதி நாட்களில், கிருமிநாசினி தெளிக்கவேண் டும். அரசு அத்தியாவசிய பணி களில் ஈடுபடும் ஊழியர்களுக் காக இயக்கும் சிறப்பு பேருந்து சேவையை போன்று வங்கி ஊழியர்களுக்கும் ஏற்படுத்தி தரவேண்டும். கரோனா சோதனை மற்றும் சிகிச் சைக்கு அனுமதிக்கப்படும் வங்கி ஊழியர்களுக்கு மருத் துவமனைகளில் முன்னுரிமை வழங்கவேண்டும்.


கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். வீடுகளில் இருந்து பணியாற்றுபவர் களை சுழற்சி முறையில் வங்கி பணிக்கு அனுமதிக்க வேண் டும். வங்கி சேவை அத்தியா வசிய பணி என்பதால், வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment