இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்.
தமிழ்நாடு அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும்
திராவிடர் கழகம் நடத்தும் (27.8.2020) ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
தந்தை பெரியார் வாழ்க!
அன்னை மணியம்மையார் வாழ்க!
தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!
இந்திய அரசே... இந்திய அரசே!
நீட் தேர்வை ரத்து செய்!
தமிழக அரசே... தமிழக அரசே!
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி
அவசரச் சட்டம் இயற்றிடு!
போதாதா... போதாதா...
அனிதா முதல் சுபசிறீ வரை
கொன்று குவித்தது போதாதா?
நீட் என்னும் பெயராலே
மாணவர் உயிரைக் குடிக்காதே!
பறிக்காதே பறிக்காதே
ஒடுக்கப்பட்டோர் மருத்துவக் கனவைப்
பறிக்காதே பறிக்காதே
திணிக்காதே திணிக்காதே
கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க
நீட் தேர்வைத் திணிக்காதே!
மருத்துவக் கல்வி இடங்களையெல்லாம்
வடமாநிலத்தவர் கொள்ளையடிக்க
நீட் தேர்வைத் திணிக்காதே!
நுழைவுத் தேர்வுகள் திணிப்பெல்லாம்
சமூகநீதிப் பறிப்பேதான்!
விடமாட்டோம் விடமாட்டோம்
போராடி போராடிப் பெற்ற
சமூக நீதியைத் தட்டிப்பறிக்க
விடமாட்டோம் விடமாட்டோம்
ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சதியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
மத்தியத் தொகுப்பு என்று சொல்லி
இடஒதுக்கீட்டை மறுப்பதா?
புதிய கல்வி என்று சொல்லி
கல்வி வாய்ப்பை ஒழிப்பதா?
தொழிற்கல்வி என்று சொல்லி
குலக்கல்வியைத் திணிப்பதா?
நீட் தேர்வு என்று சொல்லி
மருத்துவக் கனவைப் பறிப்பதா?
அனுமதியோம். அனுமதியோம்!
சமூகநீதியைப் பறிப்பதை
அனுமதியோம்! அனுமதியோம்!
போராடுவோம் போராடுவோம்
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!
வெல்க வெல்க வெல்கவே
சமூகநீதி வெல்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே
சமூகநீதிப் போராளிகள்
வாழ்க வாழ்க வாழ்கவே!
- திராவிடர் கழகம்
No comments:
Post a Comment