கொலை வழக்கில் 27 ஆண்டுகள் தவறான சிறைவாசத்துக்குப்பின் விடுதலை இழப்பீடு கோரலாம் சீனாவில் நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 9, 2020

கொலை வழக்கில் 27 ஆண்டுகள் தவறான சிறைவாசத்துக்குப்பின் விடுதலை இழப்பீடு கோரலாம் சீனாவில் நீதிமன்றம் தீர்ப்பு

பீஜிங், ஆக. 9- சீனாவில் 1993ஆம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் ஜாங் யுகுவான் என்பவர் கைது செய்யப் பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை நீதிமன்றம் கருதி 1995ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. ஆனால் அவர் 2 ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுப வித்த நிலையில், அவரது மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.


மொத்தத்தில் அவர் இந்த வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். ஆனால் அவர் காவல்துறையின ரின் சித்ரவதையால் 2 சிறுவர்களையும் தான் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்க நேர்ந்தது என்பதுதான் உண்மை. இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் முரண் பாடுகள் இருப்பதாகவும், அது நடந்த குற் றத்துடன் பொருந்திவரவில்லை என்றும் வாதிடப்பட்டது.


அதைத் தொடர்ந்து அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத் தரவிட்டது. இதையடுத்து அவர் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜாங் யுகுவானை 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி சாங் ஸியான்யு விவாகரத்து செய்து விட்டு: மறுமணம் செய்து கொண்டார். ஆனாலும் தனது முன்னாள் கணவர், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டதில் இருந்து வெளியே வர தன்னால் ஆன சட்ட உதவி களை செய்துள்ளார் என்பதும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.


கடைசியில் தனது முன்னாள் கணவர் நிரபராதி என நீதிமன்றத்தால் இப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் கூறும்போது, “உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பைக் கேட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என கூறினார்.


தவறாக சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்ததற்காக ஜாங் யுகுவான் இழப்பீடு பெற முடியும் என்று உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. எவ்வளவு இழப்பீடு கோருவது என்பதை ஜாங் யுகுவானிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வழக்குரைஞர் வாங் பெய் தெரிவித்தார்.


கொலை வழக்கில் 27 ஆண்டு காலம் தவறான சிறைவாசம் அனுபவித்து ஜாங் யுகுவான் விடுதலையாகி இருப்பது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment