வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி

கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு



திருவனந்தபுரம்,ஆக.6 வெளிநாடு களில் வேலை இழந்தோருக்கு உதவ, அவர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: ''கரோனா நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதால் நோய் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையையும் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகா தாரத் துறையி னருக்கு உதவுவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் பணியை அவர்கள் மட்டுமே செய்வார்கள். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை எளிதில் கண்டுபிடிக்க காவல் துறையினரால்தான் முடியும். எனவேதான் அந்தப் பொறுப்பு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வேலை இழந்தவர்களுக்கு உதவுவ தற்காக, அவர்களுக்குத் தலா ரூ.5,000 நிதியுதவி கொடுக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது''.


இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.


 


வேற்றுமையில் ஒற்றுமை மாண்பைப் பாதுகாக்க வேண்டும்


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்



கொல்கத்தா,ஆக.6 இந்தியாவின் பெருமையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். அவர் டுவிட்டர் பதிவில், நமது நாட்டின் பெருமைக்குரிய சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இந்த மாண்பினை நீண்ட காலமாக நாம் பாதுகாத்து வருகிறோம். எதிர்காலத்திலும் இது பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.


 


திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்துக்கு பொறுப்பு துணைவேந்தர் நியமனம்


திருவாரூர்,ஆக.6 திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் அருகே, நீலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல் பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஏ.பி.தாஸ் பதவி வகித்து வந்தார். இவரின் பதவிக்காலம் நேற்றுடன் (ஆக.5) நிறைவடைந்த நிலையில், பல்கலைக் கழகத்தின் இடைக்கால துணைவேந்தராக பேராசிரியர் கற்பக குமாரவேல் (பொறுப்பு) பதவி ஏற்றுள்ளார்.


நேற்று மாலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். மேலும், மனித வள மேம்பாட்டு மய்யத்தின் இயக்குநராகவும், யூஜிசி ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.


"ஜனநாயக வழியில் எனது நிர்வாகப் பணி இருக்கும். நடுநிலையுடன் மத்திய பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்த அனைத்து வகையான முயற்சிகளும் மேற் கொள்ளப்படும்" என கற்பக குமாரவேல் தெரிவித்துள்ளார்.


வேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை



பவானிசாகர், ஆக.6 ஈரோடு மாவட்டத்தில் மேற்குச் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.


பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகக் கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படு கிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.


கடந்த 3ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 1,072 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 85.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப் பகுதியில்


இரண்டு  நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 105 அடி கொண்ட அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் தினமும் இரண்டு அடி உயர்ந்து 91.75 அடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24,112 கனஅடியில் இருந்து 29,667 கனஅடியாக அதிகரித்துள்ளது.


No comments:

Post a Comment