நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

நன்கொடை


திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்கொடி ஆகி யோரின் பேரனும் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம் பாக்கம் பொறியாளர் வசந்தகுமார்-மணி யம்மை இணையரின்  மகனுமான ம.வ.கவிச்சரண் நான்காம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக (16.8.2020) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 வழங்கப்படுகிறது. நன்றி, வாழ்த்துகள்!


- - - - -



செய்யாறு முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மறைந்த பா.அருணாசலம் அவர்களின் வாழ்விணையர் திருமதி அமிர்தம்மாள் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் (17.8.2020) மற்றும் நினைவில் வாழும் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மறைந்த பா.அருணாசலம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (28.8.2020) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்ந்தாயி ரம் (ரூ.5000) நன்கொடையினை செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் வழங்கியுள்ளார். நன்றி!


- - - - -



சிவகங்கை  திராவிடர் கழக நகரத் தலைவர் இரா.புகழேந்தி, எம்.ஏ அவர்களின் தாயார் திருமதி இரா.சத்தியபாமா அவர்களின் இருபத்து நான்காம் ஆண்டு நினைவுநாள் மற்றும் அவரின் தந்தையாரும், திரா விட இயக்கத்தின் மூத்த முன்னோடி யுமான கா.இரசபதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்ந்நூறு (ரூ.500) நன்கொடையாக அளிக்கப்பட்டது. நன்றி!


No comments:

Post a Comment