பூகம்பம், எரிமலை வெடிப்பு, புயல் காற்று, கடு மழை ஆகிய காரியங்களை ஏன் சிருஷ்டித்தார்? கெட்ட மனிதர்கள் துன்பம் அனுபவிக்க என்று சொல்லப்படு மானால், கெட்ட மனிதர்களை ஏன் சிருஷ்டித்தார்? நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று சொல்லமுடியாத குழந் தைகள், மற்ற ஜீவன்கள் ஆகியவைகளுக்கும் துன்பம் அடையும்படி ஏன் செய்தார்? இவைகளுக்கெல்லாம் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வதயாபரத் தத்து வமும் உடைய ஒரு கடவுள் ணீஉலகத்தைச் சிருஷ்டித்து நடத்தி வருகிறார் என்று சொல்லும் ஆஸ்திகன் என்ன சமாதானம் பதில் சொல்லக்கூடும்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 09.07.1949
‘மணியோசை’
No comments:
Post a Comment