தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட 829 பேர் வெற்றி: அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வு முடிவு வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட 829 பேர் வெற்றி: அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வு முடிவு வெளியீடு


சென்னை, ஆக. 5- குடிமைப்பணித் தேர்வு (அய்ஏஎஸ், அய்பிஎஸ்) முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழக அளவில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


மேலும் 100 சதவீதம் கண்பார்வையற்ற 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2019ஆம் ஆண்டுக்கானது) 829 பதவிகளை நிரப்பு வதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி நடந்தது. இத்தேர்வை 5.50 லட்சம் பேர் எழுதினர். ஜூலை 12ஆம் தேதி முதல்நிலை தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.


இதில் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி 14ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 2,304 பேருக்கான நேர்முக தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச்சில் நடைபெற்றது.


இந்நிலையில், நேர்காணல் முடிந்ததைத் தொடர்ந்து, இறுதித் தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் (www.upsc.gov.in) நேற்று வெளியிட்டது. இதில் அகில இந்திய அளவில் 829 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ள னர். இந்திய அளவில் பிரதீப் சிங் முதலி டத்தையும், ஜடின் கிஷோர் 2ஆவது இடத் தையும், பிரடீபா வர்மா 3ஆவது இடத்தை யும் பிடித்துள்ளனர்.


தமிழகத்தில் நாகர் கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர்  முதல் இடம் பிடித்துள்ளார். பார்வை மாற்றுத் திற னாளிகள் மதுரையை சேர்ந்த பூர்ண சுந்தரி, சென்னை பெரம் பூர் பால நாகேந்திரன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். வெற்றி பெற்றவர் களில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது


 


No comments:

Post a Comment