* மின்சாரம்
வேதியம் - என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் இருக்கலாம் யதார்த்தத்தில் விஷம்கக்கும் ‘ஆதிசேஷன்’ என்று அவாள் மொழியில்
கூறிவிடலாம்.
எடுத்துக்காட்டுக்கு துவாபரயுகத்துக்கெல்லாம் போக வேண்டாம். குரு மூர்த்தி என்ற குடுமி ஒவ்வொரு வாரமும் ‘துக்ளக்‘கில் கக்கும் ஆலகால விஷம் ஒன்றே போதும்.
19.8.2020 வெளிவந்த ‘துக்ளக்‘கின் ஒவ்வாரு பக்கத்திலும் விஷ நாகங்கள் கோர ரூபம் காட்டுவதைக் காண முடியும்.
கேள்வி: சிறியார்க்கும் சேர்த்து பெரியார் உழைத்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளது...?
பதில்: ஸ்டாலின் கூறும் பெரியார் ஈ.வெ.ரா. அவரது தந்தை கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் உழைத்திருப்பார். அவர் மகன் உதயநிதி, பேரன் இன்பநிதி சிறியார் என்றால் அவர்களுக்கும் உழைத்திருப்பார் அவர் கூறுவது உண்மைதான்.
இந்தப் பதிலில் நக்கலும் ஆத்திரமும் நஞ்சும் கலந்திருக்கிறதே தவிர, ஏதாவது பொருள் இருக்கிறதா?
தளபதி ஸ்டாலின் எங்கே பேசினார் - எப்பொழுது பேசினார் - முன்னாலும் பின்னாலும் பேசியது என்ன என்ற விவரம் ஒன்றும் இருக்காது - தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தி இந்த வார ‘துக்ளக்‘கில் எழுத வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
சிறியார் என்பதற்கு இருபொருள்படும்படி எழுதுவதன் நோக்கம் என்ன?
அந்த சொல்லை எந்த பொருளில் குருமூர்த்திகள் கையாளுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி எல்லாம் அவாளுக்குச் “சிறியார்”
உண்மையைச் சொல்லப் போனால் தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லும் இவர்களின், பெரியவாளைவிட ‘சிறியார்’ உலகில் வேறு யார் இருக்க முடியும்.
Ôநாஸ்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே’ என்று கூறும் இவர்களின் ஜெகத் குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியைவிட மனிதப் பண்பு மருந்துக்கும்கூட இல்லாத ‘சிறியார்’ வேறு யாராகத்தான் இருக்க முடியும்?
‘பிராமணர்களுக்காக நான் கம்யூனலாகப் பேசுகிறேன்” என்று கூறும் வகுப்புத்துவேஷியை ‘ஜெகத் குரு’ என்று சிரசில் தூக்கி வைத்துக் கூத்தாடும் கும்பலைவிட கழிசடைத்தன சிறியார்களை வேறு எங்கு தேடிட முடியும்?
காஞ்சி மடத்தின் சார்பில் பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கிட உள்ளதாக அழைக்கப்பட்ட ஓர் அக்கிரகார எழுத்தாளர் பெண்மணியைக் கையைப் பிடித்து இழுத்த கேடு கெட்ட ஆசாமிதான் ஜெகத்குரு என்றால் இவர்கள் ஜெகம் எந்த யோக்கியதையுடையது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
குருமூர்த்திகளே கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்பட வேண்டாம்!
கேள்வி: கருப்பர் கூட்டம் - திராவிடர் கழகம் வேறுபாடு என்ன?
பதில்: திராவிடர் கழகம் ஒரிஜனல் கருப்பர் கூட்டம், கருப்பர் கூட்டம் டிஜிட்டல் திராவிடர் கழகம்.
- ‘துக்ளக்‘கில் பதில் இது.
ஆம், திராவிடர்கள் கருப்பர்கள்தாம் - ஆரியர்கள் சிவந்தவர்கள்தான். இந்த ஆரியர் - திராவிடர் போரட்டத்தைத்தான் இந்த 2020லும் குருமூர்த்தி குயுக்தியாக நினைவூட்டுகிறார்.
திராவிடர்கள்தானே இராமாயணம் போன்ற இதிகாசங்களிலும், வேதங்களிலும் கருப்பர்கள் என்றும், கருப்பர்கள் கூட்டம் என்றும் இழித்துப் பழித்துப் பேசப்பட்டுள்ளனர்.
ஆதாரம் தேவையா? இதோ அடுக்கடுக்காக உண்டு; ஆனாலும், ஒன்றிரண்டு உதாரணத்துக்கு
“அக்னியே!
நீ ஒளிப்பிழம்பாக உயர்ந்து அவனுடையே எதிரிகளான கருப்பர்களின் கோட்டைகளை எரித்தாய். கருப்பர்கள் பயந்து அவர்களுடைய சொத்துக் களையெல்லாம் அப்படியே விட்டு விட்டு அன்னிய தேசங்களுக்குச் சிதறி ஓடி விட்டார்கள்." (ரிக்வேதம் 5192)
"இந்திரன் வேள்வியை வெறுக்கும் தாசர்களை, ஆரியர்களின் நன்மைக்காகத் தண்டித்தான். அசுரனின் கருப்பான தோலை உரித்தான்; தஸ்யூக்களைச் சாம்பலாக்கினான்." (ரிக்வேதம் 1463)
“இந்திய அய்ரோப்பியர் அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக் காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கிறது”
(பால்மாசின் எழுதிய “புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்'' பக்கம் 19)
இப்பொழுது புரிகிறதா? கருப்பர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள்தாம்.
அதனைத்தான் இந்த 2020ஆம் ஆண்டிலும் குருமூர்த்தி கூட்டம் குத்திக் காட்டுகிறது.
ஒரு வகையில் நல்லதுதான். நடப்பது - கருப்பர்களாகிய திராவிடர் களுக்கும், ஆரியப் பார்ப்பனர்களான சிவத்தவர்களுக்கும் நடக்கும் போராட்டம் தான் என்பதை குருமூர்த்தி பார்ப்பனர் கூட்டம் ஒப்புக் கொண்டு விட்டது.
நடப்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்ற தந்தை பெரியார் கூற்றை காலந்தாழ்ந்தாவது பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
ஒட்டுமொத்த பார்ப்பனர் அல்லாதாரே, இந்த பார்ப்பனக் கூட்டத்தைத் தெரிந்துகொள்வீர்.
நம் இனத்தவர் யார்? நம் இன எதிரிகள் யார்?
புரிந்துகொள்வீர்!
No comments:
Post a Comment