இன்று திராவிடர் கழகம் பிறந்த நாள்-வாழ்த்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 27, 2020

இன்று திராவிடர் கழகம் பிறந்த நாள்-வாழ்த்துகள்!


இன்று திராவிடர் கழகம் சேலத்தில் பிறந்த நாள் (1944). திராவிடர் கழகத்தின் சாதனைகள் என்பவை சரித்திரத்தில் நிலைத்து நிற்கக் கூடியவை.


எதிர்ப்புகள், துரோகங்கள், அடக்குமுறைகள், சிறைச் சாலைகள் அனைத்தையும் முத்தமிட்டு முன் னணித் ‘தூசிப் படையாக' (Sappers and Miners) பணியாற்றி வந்திருக்கிறது.



சமூகநீதித் தடத்திலும், பகுத்தறிவு - இனமானப் பாட்டையிலும்,  பாலியல் நீதியின் திசையிலும், மண்ணுரிமைக் களத்திலும், ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் புலத்திலும், சமநீதி சமத்துவக் கோட்பாட்டிலும்,


திராவிடர் கழகம் பொறித்த முத்திரைகள் கால உச்சியில் என்றும் சுழலும் மங்கா ஒளி வெளிச்சமாகும்.



திராவிடர் கழகத்தின் தாக்கமில்லாத் துறைகள் இல்லை - கட்சிகள் இல்லை - இயக்கங்கள் இல்லை - தமிழர்கள் இல்லை. இனியும் எதிர்கொள்ளவேண்டிய பணிகளும், தளங்களும் மிக்குண்டு. அவற்றிலும் வெற்றி முத்திரை பதிப்போம். கருப்பு மெழுகுவத்திகளாக உழைக்கும் கருஞ்சட்டைத் தோழர்களுக்கு வாழ்த்துகள்! களம் பல கண்டு மறைந்தும், மறையாமல் உணர்வால், உழைப்பால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


27.8.2020


 


No comments:

Post a Comment