சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஆக. 20- சென்னை மாநகராட்சி செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது,
பெருநகர சென்னை மாந கராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆண்டு வருமானம் 10,000க்கும் குறை வாக உள்ள சிறு கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவா லயங்கள் மற்றும் இதர மத வழிபாட்டு கூடங்கள் திறக்க பெருநகர சென்னை மாநக ராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெறுவதற்கு பெரு நகர சென்னை மாநகராட் சியின் https://www.chennaicorporation.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும் மற்றும் மேற்படி மத வழி பாட்டு தலங்களை திறக்கும் போது பின்வரும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedures) ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
- வழிபாட்டுத்தலங்களில் தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண் டும்.
- வழிபாட்டுத்தலங்களின் நுழைவாயிலில் பக்தர்களின் வசதிக்காக கைகளை சுத்தம் செய்ய சோப்புநீர் கலவையில் கைகளை கட்டாயம் வைக் கப்பட வேண்டும்.
- வழிபாட்டின் போது போதிய சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் ஒருபோ தும் அதிக கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வழிபாட்டுத்தலங்களுக் குள் உணவு பிரசாதங்கள் வழங்க அனுமதி இல்லை.
- வழிபாட்டுத்தலங்களின் ஊழியர்கள், தன்னார்வலர் கள் மற்றும் பக்தர்கள் அனை வரும் முகக்கவசம் அணிந்தும் மற்றும் இதர பாதுகாப்பு முறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- வழிபாட்டுத்தலங்களை திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேர விவரத்தினை நுழைவாயிலில் தவறாமல் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண் டும்.
- பக்தர்களைத்தவிர மற்ற வேறு நபர்கள் வழிபாட்டுத் தலங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது.
- வழிபாட்டுத்தலங்களில் பண்டிகை சார்ந்த நிகழ்ச்சி களுக்கு ’நிர்ணயிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையை விட கூடுதலான நபர்கள் சேர்க் கைக்கு அனுமதி இல்லை.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி எல் லைக்குட்பட்ட பகுதிகளில், மேற்தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் அடிப்படை யில், ஆண்டு வருமானம் 10,000-க்கும் குறைவாக கொண்டு செயல்படும் மதவழிபாட்டு தலங்களை திறப்பதற்கு விண் ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம் எனவும், வழி பாட்டுத்தலங்களை திறக்கும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedures) பின்பற்ற தவறும்பட்சத்தில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப் பில் தெரிவிக்கப்பட்டு உள் ளது.
No comments:
Post a Comment