இந்து முன்னணி - பா.ஜ.க. கூட்டத்திற்கு மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியமா , பக்தி வியாபாரம் முக்கியமா, தேர்தல் அரசியலுக்கு அச்சாரமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

இந்து முன்னணி - பா.ஜ.க. கூட்டத்திற்கு மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியமா , பக்தி வியாபாரம் முக்கியமா, தேர்தல் அரசியலுக்கு அச்சாரமா

இந்து முன்னணி - பா.ஜ.க. கூட்டத்திற்கு மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியமா?


பக்தி வியாபாரம் முக்கியமா?


தேர்தல் அரசியலுக்கு அச்சாரமா?


மத விழாக்களில் மக்கள் ஏராளம் கூடும் ஆபத்து ஏற்படுகிறது.


இந்து மத விழாச் சிலைகளை நிறுவி ஊர்வலம் நடத்தி, பலரும் கூடி பிள்ளையார் சிலைகளைக் கரைக்கச் செல்லும்போது, மசூதிகள் முன் கலவரம் நடத்துவது இதற்குமுன் பலமுறை நடந்த ஒன்று.


கரோனா தொற்று ஏராளம் பரவி வரும் நிலையில், பகிரங்கமாக பழைய மாதிரி ஆங்காங்கு ஆட்களைவிட்டு சிலை வைக்கச் செய்ய இந்து முன்னணி, பா.ஜ.க. போன்ற அமைப்புகள் இதை வைத்து ‘‘அரசியல்'' நடத்தும்  ‘‘பிள்ளையார் அரசியல்'' என்பது தவிர வேறு என்ன?


மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது ஓர் அரசின் கடமையே தவிர, பக்திப் பரவுவதை  முக்கிய வேலையாகச் செய்வதே அதன் வேலை அல்ல!


திருப்பதி கோவிலை மீறி திறந்ததால், அங்கே தலைமை அர்ச்சகர் உள்பட பலருக்கும் கரோனா தொற்று. ஒரு சிலர் மாண்டும் உள்ளனர். இந் நிலையில், மக்கள் நலன், உயிர்ப் பாதுகாப்பு இவர் களுக்கு முக்கியமல்ல; இவர்களுக்குக் குறியெல் லாம் - பக்தி வியாபாரம், மதவெறி பரப்புதல் தான் முக்கியம் என்பதும், தேர்தலில் அதனையே மூலதனமாக ஆக்கி, வாக்கு வங்கி அரசியல் நடத்த  முயற்சிப்பது அல்லாமல் வேறு என்ன?


பிள்ளையார் கோவில்களை அரசு மூட வில்லையே! பின் ஏன் புலம்பல்?


மதக் கலவரம் செய்யத் திட்டமா?


தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?


No comments:

Post a Comment