ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 11, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புக்கான அதிகாரி, ஆங்கிலத்தில் கூட பேச இயலாமல் போனது வருத்தத் திற்குரியது. தமிழ் நாட்டில் தமிழை யார் மீதும் திணிப்பது இல்லை என்பதை அந்த அதிகாரி, இங்கே பணிபுரியும் வட நாட்டுத் தொழிலாளர்களிடம் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அது விமான நிலையமோ, பல்கலைக்கழகமோ அல்லது புதிய கல்விக் கொள்கையோ, தங்கள் மீது ஒரு மொழி திணிக்கப்படும் போது எதிர்ப்பார்கள் என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பைத் தொடர்ந்து, காங்கிரஸில் ஆட்சிக்குத் தற்போது எந்த ஆபத்தும் இருக்காது.

  • சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மொழி குறித்தும், அதைத் தொடர்ந்து ‘நீங்கள் இந்தியரா’ என்ற கேள்வி எழுப்பியது குறித்தும், திராவிடர் கழகத் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • நீதிபதிகள் பற்றி அவதூறு பேசியதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது நடைபெறும் நீதிமன்ற வழக்கை, தொடர்ந்து நடத்திட உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


- குடந்தை கருணா


11.8.2020


No comments:

Post a Comment