சென்னை, ஆக. 14- தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தலைமை செயலகக் கோட்டைக் கொத் தளத்தில் 15ஆம் தேதி காலை 8.45க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார். வீடுகளுக்கே சென்று தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு இனிப்பு பெட்டகம் தர முதல மைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
கரோனா பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் சிறப்பிக்கிறார். சுதந் திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந் தைகள் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment