புவனகிரி, ஆக. 16- புவனகிரியில், பா.ஜ.க. கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியேற்றினர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் கொடியை இறக்கி, வட்டாட்சிய ரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் உள்ள, பா.ஜ.க. கட்சி வண்ணம் பூசப் பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியிருந்தனர். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டித்து ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் வருவாய் துறை யினர் வந்து, தேசியக் கொடியை இறக்கும்படி பா.ஜ.கவினரிடம் கூறினர். 'கொடியை மாலை, 6:00 மணிக்கு தான் இறக்குவோம்' எனக்கூறி, பிடிவாதம் பிடித்தனர். பின், காவல்துறை பாதுகாப்பு டன், வருவாய்த் துறையினர் தேசியக் கொடியை இறக்கி, வட்டாட்சியர் தேவியிடம் ஒப்படைத்தனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த பா.ஜ.க வினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரை ஒழிக என முழக் கம் எழுப்பினர். பா.ஜ. கவைச் சேர்ந்த ஒன்பது பேரையும் காவல் துறையினர் கைது செய் தனர்.
No comments:
Post a Comment