நீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

நீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது!

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றத்தில் விளக்கம்



புதுடில்லி, ஆக.5 நீதிபதி மீதான விமர்சனம் நீதிமன்றத் தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது என்று, தன்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


மூத்த வழக்குரைஞர் பிர சாந்த் பூஷன் கடந்த ஜூன் 27 அன்று டுவிட்டரில் சில கருத்துகளைப்  பதிவிட்டிருந் தார்.


அதில், கரோனா காலத் தில் புலம் பெயர் தொழி லாளர்கள் வழக்கை உச்சநீதி மன்ற நீதிபதிகள்கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறைகுறித்தும், பீமா கோரே கான் வழக்கில் கைதாகி யுள்ள சமூகச் செயற்பாட் டாளர்கள் வரவர ராவ், சுதா பரத்வாஜ் ஆகி யோருக்குச் சரியான சிகிச்சை அளிக்கப் படாததையும், நீதிபதிகள் அதனைக் கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.


கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அவசர நிலையும் பிறப்பிக்கப் படாமலேயே ஜனநாயகம் அழிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில், உச்சநீதிமன்றத்தின் 4 முன்னாள் தலைமை நீதிபதிகள்ஆற்றிய ‘பங்களிப்பு’ முக்கியமானது என்றும் சாடி யிருந்தார்.


வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன்


இந்நிலையில், பிரசாந்த் பூஷனின் இந்த விமர்சனங்கள் நீதிமன்றத்தை அவமதிப்ப தாகக் கூறி, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வு, தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. பிரசாந்த் பூஷனுக்கு நோட்டீசும் அனுப்பியது. இதற்கு வழக் குரைஞர் பிரசாந்த் பூஷன் தற்போது விளக் கம் அளித்துள்ளார்.


அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:


“தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஹார்லி டேவிட்சன் பைக்கை ஓட்டவில்லை. பைக் நிறுத்தித்தான் வைக்கப்பட்டுள்ளது. இதை நான் கவனிக்கவில்லை. எனவே அவர் தலைக்கவசம் அணியாமல் ஓட்டினார் என்ற பதிவுக்கு வருந்துகிறேன்.


இருப்பினும், நான் கூறியவற்றின் மீத முள்ள பகுதிக்கு நான் வருந்தவில்லை. கடந்த ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் செயல் பாடுகள் மற்றும் குறிப்பாக கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் நடவடிக்கைகள், உச்சநீதிமன்றம் வெளிப்படையான  பொறுப் புணர்வுடனும் செயல்படுவதை உறுதி செய்ய வில்லை; ஜனநாயகத்தை அவை குறைமதிப் பிற்கு உட்படுத்தின என்பது எனது அப்பட்ட மான அபிப்பிராயமாகும்.


நீதிமன்றத்தில் குறைவான வழக்கு விசா ரணைக்கு நான் வேதனையடைந்தேன். வீடியோ கான்பரன்சிங் (காணொலி) மூலம் நடத்தப்படும் வழக்கு விசாரணை குறித்தும் அதிருப்தியடைந்துள்ளேன். ஆகவே, ஒரு தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் அல்லது தலைமை நீதிபதிகள் அடுத்தடுத்து ஒரே மாதிரியாக வருவதை நேர்மையாக விமர்சிப்பதை நீதிமன்றத்தை அவதூறு செய்வதாகக் கருத முடியாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை விமர்சிப்பதாகவும் கருத முடியாது.


நீதித்துறையின் பலம்


கருத்துச் சுதந்திரம் மற்றும் விமர்சிப்ப தற்கான இணக்கமான உரிமை ஆகியவை நீதித்துறையின் பலமாகும். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைப்பதாகவே ஆகாது.''


இவ்வாறு வழக்குரைஞர் பிரசாந்த்பூஷன் தனது பதிலில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment