ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • சென்ற ஆகஸ்டு 5இல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில் அடக்கு முறையும், அவநம்பிக்கையும்தான் மக்களி டையே உள்ளது என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ் நாட்டில் எழுந்துள்ள மொழி தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்து, தற்போது மேல் நிலைப்பள்ளி படித்தவர்கள் 49.5 சதவீதமாக உள்ள நிலையில், மத்திய அரசின் 50 சதவீத இலக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு கல்விக் கொள்கை குறித்து என்ன புதிய செய்தியை அளித்திட முடியும் என தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

  • குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஓராண்டுக்கும் மேலாக முழு ஊரடங்கு இன்னமும் தொடரத்தான் செய்கிறது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • அரசியல் அதிகாரத்தின்மூலம் இந்துத்துவத்தைக் காலனித்துவமாக்கும் செய்யும் முயற்சிதான் அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் பணி என எழுத்தாளர் பிரதாப் பானு மேத்தா தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.


தி இந்து, டில்லி:



  • பட்டப்படிப்பை மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டுகள் என முன்னரே டில்லிப் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தற்போது புதிய கல்விக் கொள்கையில் மீண்டும் அறிமுகமாகிறது என கட்டுரையாளர் பிரிஸ்லா ஜெபராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.


- குடந்தை கருணா


5.8.2020


No comments:

Post a Comment